Advertisement

சத்து மிகுந்த ப்ரூட் மிக்ஸ் தயிர் சாதம் செய்வது எப்படி?

By: Monisha Wed, 29 July 2020 4:21:34 PM

சத்து மிகுந்த ப்ரூட் மிக்ஸ் தயிர் சாதம் செய்வது எப்படி?

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி தரும் ப்ரூட் மிக்ஸ் தயிர் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சாதம் - 1 கப் வடித்த,
புளிக்காத தயிர் - 50 மி.லி.
ஆறவைத்த பால் - 100 மி.லி.
உப்பு, கறிவேப்பிலை - தேவைக்கு
உலர்ந்த கறுப்பு திராட்சை - 1 மேஜை கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு அரை - தேக்கரண்டி
மாதுளை முத்துக்கள் - 100 கிராம்
நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் - 3 மேஜை கரண்டி
வெள்ளரி துண்டுகள் - 3 மேஜை கரண்டி
திராட்சை பழம் - 2 மேஜை கரண்டி நறுக்கிய
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி துண்டுகள் - 3 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

rice,yogurt,milk,fruit,ginger ,சாதம்,தயிர்,பால்,பழங்கள்,இஞ்சி

செய்முறை
நன்றாக வெந்த சாதத்துடன் உப்பு மற்றும் பாலை ஊற்றி பிசையவும். சாதம் சூடாறிய பின்பு தயிரை சேர்த்து பிசைய வேண்டும். வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், இஞ்சி போன்றவற்றை சேர்த்து வதக்கவும். அதனுடன் அனைத்து பழவகைகளையும் சேர்த்து கிளறி, புளிக்கும் முன்பே சாப்பிடவும். அருமையான ப்ரூட் மிக்ஸ் தயிர் சாதம் ரெடி.

Tags :
|
|
|
|