Advertisement

சூப்பரான சத்தான ஓட்ஸ் பாசிப்பருப்பு கிச்சடி!

By: Monisha Fri, 07 Aug 2020 4:35:19 PM

சூப்பரான சத்தான ஓட்ஸ் பாசிப்பருப்பு கிச்சடி!

இன்று நாம் ஓட்ஸ் வைத்து சூப்பரான சத்தான பாசிப்பருப்பு கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - அரை கப்
பாசிப்பருப்பு - அரை கப்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 1/4 மேஜைக்கரண்டி
வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 1
கேரட் - 1
பச்சை பட்டாணி - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
ப.மிளகாய் - 2
உப்பு - சுவைக்க
கூடுதல் விர்ஜின் ஆலிவ் எண்ணெய் - 1/2 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு

oats,pacipparuppu,khichdi,onions,carrots ,ஓட்ஸ்,பாசிப்பருப்பு,கிச்சடி,வெங்காயம்,கேரட்

செய்முறை
வெங்காயம், தக்காளி, கேரட், இஞ்சி. கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாசிப்பருப்பு வேக வைத்து கொள்ளவும். ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்துகொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். பிறகு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் கேரட், பச்சை பட்டாணி சேர்த்து வேக விடவும். காய்கறிகள் நன்று வெந்ததும வேகவைத்த பாசிப்பருப்பு, ஓட்ஸ், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். 8 நிமிடங்களுக்கு வேக வைத்தால் போதும். கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும். சூப்பரான ஓட்ஸ் பாசிப்பருப்பு கிச்சடி தயார்!

Tags :
|
|