Advertisement

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி?

By: Monisha Sat, 31 Oct 2020 8:11:18 PM

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி?

ஆரோக்கியம் தரும் கத்தரிக்காயை பயன்படுத்தி எப்படி எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் – 10
பூண்டு – 10 பற்கள்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1
சிவப்பு மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
தனியா பொடி – 2 ஸ்பூன்
புளி – எலுமிச்சையின் அளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – 1/4 கப்
கடுகு – 1 ஸ்பூன்
வெந்தையம் – 2 சிட்டிகை
கருவேப்பிலை – சிறிதளவு

oil brinjal kulambu,health,garlic,onions,tomatoes ,எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு,ஆரோக்கியம்,பூண்டு,வெங்காயம்,தக்காளி

செய்முறை
முதலாவது கத்தரிக்காயின் காம்புகளைக் கிள்ளாமல் அதன் அடிப்பகுதியில் எக்ஸ் வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும். பின் அவற்றை பயன்படுத்தும் வரை தண்ணீரில் போட்டு வைக்கவும். அதனை முடித்த பிறகு ஒரு பாத்திரத்தில் புளியை ஊற வைத்து விடுங்கள். அடுத்ததாக சிறிய வெங்காயம் மற்றும் பூண்டு போன்றவற்றை தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதன்பின் சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் புளித் தண்ணீர், சிவப்பு மிளகாய், தனியா, மஞ்சள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் பதத்தில் கலக்கி கொள்ளுங்கள். கலக்கிய பிறகு இந்த பேஸ்டை நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காய்களின் இடையே நிரப்பி கொள்ளுங்கள்.

இதை முடித்த பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் வெந்தையம் சேர்த்து பொரிக்கவும். அதன்பின் சிறிய வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இது நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். கடைசியாக குக்கரை மூடி குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை வைத்திருக்கவும். விசில் வந்ததும் குக்கரை இறக்கி ஆவி வெளியே சென்ற பிறகு கொத்தமல்லி தழைகளைத் தூவி பரிமாறுங்கள்.

Tags :
|
|
|