Advertisement

மிகவும் எளிதாக ஓன் மினிட் கேக் செய்வது எப்படி?

By: Monisha Thu, 16 July 2020 4:59:03 PM

மிகவும் எளிதாக ஓன் மினிட் கேக் செய்வது எப்படி?

கேக் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு வகை. குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள். இன்றைக்கு நாம் மிகவும் எளிதாக ஓன் மினிட் கேக் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
மைதா மாவு – மூன்று டீஸ்பூன்
கோக்கோ பவுடர் – இரண்டு டீஸ்பூன்
பேகிங் பவுடர் – கால் டீஸ்பூன்
குக்கிங் சோடா – இரண்டு சிட்டிகை
மில்க் மேய்டு – மூன்று டீஸ்பூன்
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
டிரிங்கிங் சோடா – 3௦ மில்லி லிட்டர்
சாக்கோ சிப்ஸ் – சிறிதளவு
மினி சாக்லேட் பால்ஸ் – சிறிதளவு

one minute cake,maida,cocoa,baking powder,choco chips ,ஓன் மினிட் கேக்,மைதா,கோக்கோ,பேகிங் பவுடர்,சாக்கோ சிப்ஸ்

செய்முறை
மைதா மாவு, கோக்கோ பவுடர், பேகிங் பவுடர், குக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து சலித்து கொள்ளவும். பின், ஒரு கிண்ணத்தில் சளித்த மாவு, மில்க் மேய்டு, எண்ணெய், டிரிங்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக ஒருசேர கலந்து ஒரு கிளாஸ்யில் ஊற்றி மைக்ரோ வேவ் ஓவன்னில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து அதன் மேல் சாக்கோ சிப்ஸ் மற்றும் சாக்லேட் பால்ஸ் போட்டு பரிமாறவும்.

Tags :
|
|