Advertisement

வெங்காயத்தாள் செலரி தயிர் பச்சடி செய்வது எப்படி ?

By: Karunakaran Fri, 25 Dec 2020 12:15:23 PM

வெங்காயத்தாள் செலரி தயிர் பச்சடி செய்வது எப்படி ?

வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.

தேவையான பொருள்கள் :

வெங்காயத்தாள் - ஒரு கட்டு
தயிர் - 1 கப்
இஞ்சி - சிறிது
செலரி - 1 கொத்து
தக்காளி சாஸ் - அரை கப்
பச்சை மிளகாய் - 3

onion leaf,celery,yogurt tart,veg recipes ,வெங்காய இலை, செலரி, தயிர் பச்சடி, காய்கறி சமையல்

செய்முறை :

முதலில் வெங்காயத்தாள், செலரி, பச்சை மிளகாயை நன்றாக கழுவி நீரை துடைத்துக் விட்டு பொடியாக நறுக்க வேண்டும். பின் இஞ்சியை தோல் சீவி தட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் தயிரை கடைந்து உப்பு சேர்த்து, தக்காளி சாஸ், கீரைகள், பச்சை மிளகாய் மற்றும் தட்டி வைத்த இஞ்சியை போட்டு நன்கு கலக்க சுவையான வெங்காயத்தாள் செலரி தயிர் பச்சடி தயார். சப்பாத்திக்கு இது மிகவும் சுவையாக இருக்கும்.


Tags :
|