Advertisement

எளிய முறையில் பன்னீர் செய்வது எப்படி?

By: Monisha Sat, 07 Nov 2020 3:13:25 PM

எளிய முறையில் பன்னீர் செய்வது எப்படி?

நம்முடைய உணவில் தற்பொழுது இடம்பெற்று வரும் ஒரு முக்கிய உணவு பதார்த்தம் பன்னீர். இந்த பன்னீரில் பல ரெசிபிக்கள் செய்து சுவைக்கலாம். இந்த பதிவில் பன்னீரை நம்முடைய வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பால் 2 லிட்டர்
எலுமிச்சை 2

செய்முறை
எலுமிச்சையை விதை இல்லாமல் பிழிந்து சாறு எடுத்து வைத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் பாலை விட்டு அடுப்பில் வைத்து சூடுபண்ணுங்கள். பால் முதல் கொதி வருகிற மாதிரி எழும்பி வரும் சமயம் அடுப்பை அணைத்து விடுங்கள். பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறை பாலில் ஊற்றி விடுங்கள். பாலை கரண்டியால் நன்றாக கலக்கி கொண்டே இருங்கள்.

milk,lemon,paneer,recipe,taste ,பால்,எலுமிச்சை,பன்னீர்,ரெசிபி,சுவை

சிறிது நேரம் கலக்கும் பொழுது பால் சிறு சிறு துண்டுகளாக பிரிந்து வரும். வெதுவெதுப்பான சூடு இருக்கும் பொழுது மஸ்லின் துணி அல்லது காட்டன் துணியில் பாலை வடிகட்டுங்கள். துணியை சுருட்டி நன்றாக பிழிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு துணி மூட்டையை ஒரு தட்டில் வைத்து ஏதாவது கனமான பொருளை அதன் மேல் வைத்து ஒரு 3 மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள்.

3 மணி நேரம் கழித்து எடுத்துப்பார்த்தால் உங்களுக்கு தேவையான பனீர் அழகாக ரெடி ஆகி இருக்கும். உங்கள் தேவைக்கு துண்டுகளாக போட்டு வைத்து கொள்ளுங்கள். பனீர் துண்டுகளை இறுக்கமான டப்பாக்களில் அடைத்து பிரீஸரில் வைத்து தேவைக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

Tags :
|
|
|
|