Advertisement

பனங்கற்கண்டு பால் பொங்கல் பாயசம் ஈஸியாக செய்யலாம் வாங்க!

By: Monisha Wed, 01 July 2020 3:32:38 PM

பனங்கற்கண்டு பால் பொங்கல் பாயசம் ஈஸியாக செய்யலாம் வாங்க!

நமது வீடுகளில் விழாக்கள் மற்றும் விஷேசங்களில் உணவு பரிமாறப்படுவது வழக்கம். அந்த உணவில் பாயசம் முக்கிய இடம் வகிக்கிறது. இன்று நாம் புது சுவையில் சூப்பரான பனங்கற்கண்டு பால் பொங்கல் பாயசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்
பச்சரிசி – அரை கப்
பாசிப்பருப்பு – 100 கிராம்
பனங்கற்கண்டு – 100 கிராம்
தேங்காய்த் துருவல் – கால் கப்
ஏலக்காய், உலர் திராட்சை – சிறிதளவு
முந்திரி – 5
பால் – தேவையான அளவு
நெய் – சிறிதளவு

pongal payasam,milk,ghee,recipe,taste ,பனங்கற்கண்டு,பொங்கல் பாயசம்,பால்,நெய்

செய்முறை
பனங்கற்கண்டை பொடித்து கொள்ளவும். வாணலியில் பாசிப்பருப்பை கொட்டி பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். பச்சரிசியை நீரில் அலசி வைக்கவும். கழுவிய பச்சரிசியுடன் பாசிப் பருப்பு, பால் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

நன்கு வெந்ததும், ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து அதில் சேர்க்கவும். பின்னர் பனங்கற்கண்டு, தேங்காய் துருவல் ஆகியவற்றை கொட்டி கிளறவும். இறுதியில் சிறிதளவு நெய் ஊற்றி கிளறி இறக்கி ருசிக்கலாம். சூப்பரான பனங்கற்கண்டு பால் பொங்கல் ரெடி.

Tags :
|
|
|