Advertisement

சூப்பர் சுவையில் பூந்தி லட்டு செய்யலாம் வாங்க..!

By: Monisha Fri, 03 July 2020 4:27:53 PM

சூப்பர் சுவையில் பூந்தி லட்டு செய்யலாம் வாங்க..!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பூந்தி லட்டு ரெம்ப ஈஸியா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
என்னென்ன தேவை?
கடலைமாவு – 4 கப்,
சிவப்பு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை,
பச்சை ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை,
காய்ந்த திராட்சை – 8,
பொடித்த முந்திரி – 10,
நெய் – 1 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்,
ரோஸ் வாட்டர் – 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை – 4-6 கப்,
தண்ணீர், பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.

poonthi laddu,rose water,sugar,food color ,பூந்தி லட்டு,ரோஸ் வாட்டர்,சர்க்கரை,ஃபுட் கலர்

எப்படிச் செய்வது?
கடலைமாவை சல்லடையால் சலித்து தண்ணீர், 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கட்டியில்லாமல் விட்டு சரியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இக்கலவையை மூன்று பாகமாகப் பிரித்து, சிவப்பு, பச்சை ஃபுட் கலர் சேர்த்து தனித்தனியே பிரித்து வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பூந்திக் கரண்டியை வைத்து மற்றொரு கரண்டியில் மாவைத் தேய்த்து பொரித்தெடுக்கவும். இப்படித் தேய்ப்பதால் பூந்திகள் சமமாக விழும்.

இதே போல் சிவப்பு, பச்சை கலர் பூந்திகளை பொரித்தெடுக்கவும். மற்றொரு கடாயில் நெய் விட்டு பொடித்த முந்திரி, காய்ந்த திராட்சையை வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கம்பிப் பதம் வரும்வரை காய்ச்சி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் முந்திரி, திராட்சை, பூந்தி, ஏலக்காய்த்தூள், ரோஸ் வாட்டர் அனைத்தையும் கலந்து, மெதுவாக இளம்சூடான சர்க்கரை பாகை கலந்து லட்டுகளாக பிடித்து பரிமாறவும்.

Tags :
|