Advertisement

அசத்தலான சுவையில் ஆலு சாட் செய்வது எப்படி?

By: Monisha Sun, 16 Aug 2020 2:51:35 PM

அசத்தலான சுவையில் ஆலு சாட் செய்வது எப்படி?

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆலு சாட் எப்படி செய்வது என்று அறிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1
இஞ்சி - ஒரு துண்டு
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை உப்பு - தேவையான அளவு

potatoes,alooo chaat,onions,tomato sauce,tomatoes ,உருளைக்கிழங்கு,ஆலு சாட்,வெங்காயம்,தக்காளி சாஸ்,தக்காளி

செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு, தக்காளி சேர்த்து வேக விடவும்.

கூடவே, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மல்லித்தூள், மிளகுத்தூள், வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும். பின்னர், சாட் மசாலா, தக்காளி சாஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் விடவும்.

இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். பரிமாறும்போது, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிஸ்ச்சர், கொத்தமல்லித்தழை, சாட் மசாலா தூவி, தக்காளி சாஸ் சேர்த்து கொடுத்தால் அசத்தலாக இருக்கும். அசத்தலான சுவையில் ஆலு சாட் ரெடி..!

Tags :
|