Advertisement

தினை மாவில் பூரி செய்வது எப்படி?

By: Monisha Mon, 02 Nov 2020 8:15:49 PM

தினை மாவில் பூரி செய்வது எப்படி?

சத்துமிகுந்த மற்றும் கலோரி குறைந்த உணவாக இருக்கும் தினை மாவில் பூரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்கலாம்.

தேவையான பொருள்கள்
உருளைக்கிழங்கு – 1
தினை மாவு – 1 கப்
கொத்தமல்லி இலைகள்- நறுக்கியது (1 கைப்பிடியளவு)
இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு – 1 டேபிள் ஸ்பூன்

potatoes,ginger,garlic,coriander leaves,ghee ,உருளைக்கிழங்கு,இஞ்சி,பூண்டு,கொத்தமல்லி இலை,நெய்

செய்முறை
முதலாவது உருளைக்கிழங்கை வேக வைத்து அதன் தோலை உரித்து கொள்ளவும். அதன்பிறகு இதனை நன்றாக பிசைந்து அதனுடன் இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி இலைகள், உப்பு, நெய் இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இவற்றை எல்லாம் கலந்த பிறகு அதனுடன் தினை மாவையும் சேர்த்து பூரி பதத்திற்கு பிசைந்து பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து சிறு உருண்டைகளாக மாவை உருட்டி கொள்ளுங்கள்.

அதன்பின்னர் பூரி செய்ய பயன்படுத்தும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு கொதித்ததும் ஒவ்வொரு உருண்டையையும் பூரி மாதிரி உருட்டி ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும். அதன்பிறகு பிடித்தமான சைடிஸ் உடன் வைத்து சாப்பிடுங்கள்.

Tags :
|
|