Advertisement

சுவையான ராகி கூழ் செய்வது எப்படி?

By: Monisha Tue, 20 Oct 2020 6:41:38 PM

சுவையான ராகி கூழ் செய்வது எப்படி?

சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி கூழை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
ராகி மாவு - 1
தண்ணீர் - 5 கப்
சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
தயிர் - 1 கப்
மோர் மிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

taste,health,ragi,yogurt,onion ,சுவை,ஆரோக்கியம்,ராகி,தயிர்,வெங்காயம்

செய்முறை
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் ராகி மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டி சேராதவாறு கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை அடுப்பில் வைத்து, கரண்டியால் தொடர்ந்து கிளறி கொண்டே இருக்க வேண்டும். அப்படி கிளறும் போது, கலவையானது சற்று கெட்டியாகும் போது, அதனை இறக்கி விடவும். பின்பு அதில் தயிர் மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, நன்கு கரைக்க வேண்டும்.

பிறகு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், மோர் மிளகாயை போட்டு பொன்னிறமாக பொரித்து, கரைத்து வைத்துள்ள கூழில் சேர்த்து மீண்டும் நன்கு கிளறி, 5 நிமிடம் கழித்து குடிக்க வேண்டும். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி கூழ் ரெடி!

Tags :
|
|
|
|