Advertisement

சுவையான சோயா‌ ஃப்ரூட் மில்க் ஷேக் எப்படி செய்வது?

By: Monisha Thu, 16 July 2020 12:51:30 PM

சுவையான சோயா‌ ஃப்ரூட் மில்க் ஷேக் எப்படி செய்வது?

குழந்தைகளுக்கு சத்தான சுவையான மில்க் ஷேக் செய்து கொடுக்க விரும்பினால் சோயா‌ ஃப்ரூட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இந்த சத்தான மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
சோயா பால் - ஒரு கப்,
காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப்,
நாட்டு சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
விருப்பமான ஃப்ரூட் கலவை - அரை கப் (தோல், விதை நீக்கியது).

செய்முறை
அடிகனமான பாத்திரத்தில் சோயா பால் ஊற்றிச் சூடாக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்துக் கிளறி ஒரு கொதிவிடவும். இதனுடன் பால், நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி ஆறவிடவும். பிறகு, பழத்துண்டுகளைச் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து எடுக்கவும். ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பரிமாறலாம்.

Tags :