Advertisement

இனிப்பு பூந்தி செய்வது எப்படி ??

By: Monisha Sat, 27 June 2020 1:38:32 PM

இனிப்பு பூந்தி செய்வது எப்படி ??

இனிப்பு வகைகளில் பிரபலமான ஒரு ஸ்னாக்ஸ் இனிப்பு பூந்தி ஆகும். இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு பொருளாகும். சரி இதை வீட்டிலேயே செய்வது எப்படி என்று தெரிஞ்சுக்கலாம் வாங்க!

தேவையான பொருட்கள்
கடலை மாவு _ 1/4 கிலோ
நெய் _ சிறிதளவு
கேசரி பவுடர் _ சிறிதளவு(மஞ்சள்)
சீனி _ 1/2 கிலோ
டால்டா அல்லது ஆயில் _ தேவையான அளவு

sweet boondhi,snacks,peanut flour,kesari powder,sugar ,இனிப்பு பூந்தி,ஸ்னாக்ஸ்,கடலை மாவு,கேசரி பவுடர்,சீனி

செய்முறை
சீனியை ஒரு அங்கலமான பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ளவும். கடலைமாவை தண்ணீர் சேர்த்து கேசரி பவுடர் சிறிது சேர்த்துக் கொள்ளவும். தோசை மாவு போல் கரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் டால்டா அல்லது நெய்யை காயவைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி தேய்த்து எண்ணெயில் போடவும். எண்ணெயில் விழுந்த மாவை அதிகம் சிவக்காமல் வெந்ததும் எடுத்து சீனிப் பாகில் போட்டு சிறிது நேரத்தில் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். சுவையான பூந்தி ரெடி.

Tags :
|