Advertisement

இனிப்பான முட்டை பிரட் செய்வது எப்படி?

By: Monisha Fri, 13 Nov 2020 11:26:36 AM

இனிப்பான முட்டை பிரட் செய்வது எப்படி?

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இனிப்பான முட்டை பிரட் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
முட்டை -5 எண்ணம்
சீனி பொடித்து – 5 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 3 டேபிள் ஸ்பூன்
பிரட் – 1 பாக்கெட்
எண்ணெய் தேவைக்கு

eggs,sugar,bread,water,oil ,முட்டை,சீனி,பிரட்,தண்ணீர்,எண்ணெய்

செய்முறை
முதலில் 5 முட்டைகளையும் உடைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு நன்றாக அடித்து கலக்கவும். நன்கு கலக்கிய பின்னர் அதனுடன் தண்ணீர் மற்றும் பொடித்த சீனியை சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாகியதும் சிறிது எண்ணெய் விட்டு அதன் பின்னர் பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் நன்றாக இரு பக்கமும் படுமாறு நன்றாக முக்கி எடுத்து அதை தோசை கல்லில் போடுங்கள். ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி போடுங்கள். பொன்னிறமாக வரும் வரை திருப்பி போட்டு எடுத்து விடுங்கள். மிகவும் சுவையான இனிப்பான முட்டை பிரட் ரெடி!

Tags :
|
|
|
|