Advertisement

குழந்தைகளுக்கான காய்கறி பருப்பு கிச்சடி செய்வது எப்படி?

By: Monisha Fri, 04 Sept 2020 10:51:03 AM

குழந்தைகளுக்கான காய்கறி பருப்பு கிச்சடி செய்வது எப்படி?

குழந்தைக்கு சமச்சீரான சத்துக்கள் நிறைந்த கிச்சடி செய்து தரவேண்டும் என விரும்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் காய்கறி பருப்பு கிச்சடி செய்து கொடுக்கலாம்.

தேவையானவை பொருள்கள்
நெய் – 2 தேக்கரண்டி
பட்டை – 1
கிராம்பு – 1
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – 1 சிட்டிகை
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1
இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1 நீளவாக்கில் அறிந்தது
பொடியாக அறிந்த தக்காளி – 1 சிறிய அளவு
பட்டாணி – 1 தேக்கரண்டி
அறிந்த குடமிளகாய், கேரட் – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய்த் தூள் – அரை தேக்கரண்டி
அரிசி – 1 கப்
சிறு பயறு – லு கப்
கொத்தமல்லி, உப்பு, தண்ணீர் – தேவையான அளவு

baby,vegetable lentils,ghee,tomatoes,onions ,குழந்தை,காய்கறி பருப்பு கிச்சடி,நெய்,தக்காளி,வெங்காயம்

செய்முறை
குக்கரில் நெய் ஊற்றி சூடேற்றவும்.நெய் சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு வதக்கவும். பின் சீரகம் போட்டு பொரித்தவுடன், பெருங்காயம் சேர்க்கவும்.அறிந்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி-பூண்டு சேர்த்து வாசனை நீங்கும் வரை வதக்கவும். நீள வாக்கில் அறிந்து பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள்.

சிறிது வதங்கியதும் பொடியாக அறிந்த தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூளைச் சேர்த்து வதக்கவும்.பட்டாணி, அறிந்த குடமிளகாய், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் சிறுபயறு, அரிசி சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் வந்ததும் நிறுத்தி விடலாம். இறக்கியதும் கொத்தமல்லி தூவி கலக்கவும்.

Tags :
|
|