Advertisement

சுதந்திர தின ஸ்பெஷல் மூவண்ண லஸ்ஸி!

By: Monisha Sat, 15 Aug 2020 12:17:37 PM

சுதந்திர தின ஸ்பெஷல் மூவண்ண லஸ்ஸி!

சுதந்திர தினமான இன்று நமது தேசிய கொடியின் மூன்று வண்ணங்களில் லஸ்ஸி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
ஆரஞ்சு நிறத்திற்கு
குங்குமப்பூவின் சிரப் - 2 மேசைக்கரண்டி
வெள்ளை நிறத்திற்கு
தயிர் -3 கப்
பச்சை நிறத்திற்கு
வெட்டிவேர் சிரப் 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் பொடி 1 மேசைக்கரண்டி
சர்க்கரை 3 மேசைக்கரண்டி

செய்முறை
தயிரை நன்றாக அடித்துக்கொள்ளவும். அதில் சர்க்கரை மற்றும் ஏலக்கய் பவுடரை சேர்க்கவும். மேற் கூறியவற்றை மூன்று பாகமாகப் பிரித்துக்கொள்ளவும். ஒரு பாகத்தில் குங்குமப்பூவின் சிரப்பை சேர்த்துக்கொள்ளவும். ஒன்றில் வெட்டிவேர் சிரப்பை சேர்க்கவும். ஒரு பாகத்தை அப்படியே வைத்துக்கொள்ளவும்.

நீளமான கண்ணாடி கிளாஸில் முதலில் வெட்டிவேர் சிரப் கலந்த தயிரை ஊற்றவும். அதன் மீது வெள்ளை தயிர், கடைசியாக குங்குமப்பூ தயிர் ஊற்றவும். இதன் மீது நறுக்கிய பிஸ்தாவை தூவி அலங்கரிக்கவும். ஜில்லென்று பரிமாறவும்.

Tags :
|