Advertisement

பாலக் கீரையில் கட்லெட் செய்து அசத்துங்கள்

By: Nagaraj Mon, 24 Aug 2020 10:41:28 AM

பாலக் கீரையில் கட்லெட் செய்து அசத்துங்கள்

பாலக் கீரை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்ததாக பரிந்துரைக்கப்படுகின்றது, பாலக் கீரையை கடைந்தோ அல்லது பொரியலாகவோ சாப்பிட விரும்பாதவர்கள் பாலக்கீரையில் கட்லெட் செய்வது சாப்பிடலாம். இதோ அதற்கான செய்முறை.

தேவையானவை:
பாலக்கீரை - ஒரு கட்டு
ஸ்வீட் கார்ன் - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு துண்டு
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 2 டீஸ்பூன்
பிரெட் தூள் - 5 டீஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு

lettuce,bread crumbs,ginger,chilli powder,cumin powder ,பாலக்கீரை, பிரெட் தூள், இஞ்சி, மிளகாய் தூள், சீரகத்தூள்

செய்முறை: ஸ்வீட் கார்னை வேக வைத்து கொள்ளவும். அடுத்து உருளைக்கிழங்கு வேகவைத்து மசிக்கவும். அடுத்து சோளம் மற்றும் பாலக்கீரையை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சாட் மசாலா, உப்பு, அரைத்து சோளம்- பாலக்கீரையைக் கலந்து பிசையவும். பின்னர் பிரெட் தூளை சேர்த்து பிசைந்து வடை போல் தட்டி தோசை கல்லில் எண்ணெய்விட்டு வறுத்து எடுத்தால் பாலக்கீரை கட்லெட் ரெடி..!

Tags :
|