Advertisement

சுவையான வேர்க்கடலை சாட் செய்து கொடுத்து அசத்துங்கள்

By: Nagaraj Fri, 11 Sept 2020 09:04:58 AM

சுவையான வேர்க்கடலை சாட் செய்து கொடுத்து அசத்துங்கள்

சுவையான வேர்க்கடலை சாட் செய்து கொடுத்து குழந்தைகளை அசத்துங்கள். வேர்க்கடலையில் உள்ள சத்துக்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உயர்த்தும்.

தேவையானவை:

பச்சை வேர்க்கடலை – 100 கிராம்
நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்
நறுக்கிய தக்காளி – கால் கப்
வெள்ளரித் துண்டுகள், மாங்காய்த் துண்டுகள் – தலா கால் கப்
துருவிய கேரட், ஓமப் பொடி – தலா கால் கப்
கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி
சுட்ட அப்பளம் – 2, பேரிச்சம் பழம் – 6
கருப்பு உப்பு – ஒரு டீஸ்பூன்
சாட் மசாலா, சர்க்கரை – தலா ஒரு டீஸ்பூன்

peanuts,coriander,baked waffles,mango slices ,வேர்கடலை, கொத்தமல்லி, சுட்ட அப்பளம், மாங்காய் துண்டுகள்

செய்முறை: வேர்க்கடலையை நான்கு மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் இரண்டு விசில் வரும்வரை வேக வையுங்கள். பாதியளவு வெந்தால் போதும்.

வேகவைத்த கடலையுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரி, மாங்காய்த் துண்டுகள் சேர்த்துக் கலக்குங்கள். அதனுடன் உப்பு, சர்க்கரை, சாட் மசாலா சேர்த்துக் கொத்தமல்லி தூவிப் பரிமாறுங்கள்.

குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது ஓமப் பொடி, சுட்ட அப்பளத்தை நொறுக்கி, மேலே தூவுங்கள். இந்த சாட், இனிப்பும் புளிப்பும் நிறைந்துள்ளதால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். ஆரோக்கியமானதும் கூட.

Tags :