Advertisement

கீரைகள் கலந்த மூலிகை சூப் தயாரிக்கும் முறை

By: Nagaraj Tue, 04 Aug 2020 10:51:08 AM

கீரைகள் கலந்த மூலிகை சூப் தயாரிக்கும் முறை

காய்கறிகள், கீரை வகைகளில் உள்ள பி2, பி6 வைட்டமின்கள் மூளையைப் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள துணைபுரியும். கறிவேப்பிலை, புதினா, கீரை வகைகள், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, புரொக்கோலி என உடல் ஆரோக்கியத்துக்கு துணைபுரியும் மூலிகைகள், பச்சைக் காய்கறிகள் இயற்கை நமக்குத் தந்த வரம். இவற்றைக் கொண்டு இந்த மூலிகை சூப் செய்து அருந்துங்கள்.

செய்முறை: குக்கரில் சுத்தம் செய்த புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை அனைத்தும் சேர்த்து இரண்டு கைப்பிடி அளவு, பாலக்கீரை அல்லது முருங்கைக்கீரை இரண்டு கைப்பிடி, துளசி அல்லது திருநீற்றுப்பச்சிலை மூன்று, சீரகம், மிளகு கால் டீஸ்பூன், திப்பிலி மூன்று, வெற்றிலை ஒன்று, எலுமிச்சைச்சாறு சில துளிகள் , துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன், பூண்டு ஆறு பற்கள், ஓமம் ஒரு சிட்டிகை, கிராம்பு இரண்டு, தேவையான அளவு உப்பு, அரிசி கழுவிய நீர் 400 மில்லி சேர்த்து நான்கு விசில் வந்ததும் இறக்கி வடிகட்டவும். அதில் சிறிதளவு சோள மாவுக் கரைசல் சேர்த்து சூடாக்கி, கொதி வந்ததும் இறக்கி சூடாகப் பருகவும்.

herbal soup,fever,iron,calcium,vegetables ,மூலிகை சூப், காய்ச்சல், இரும்புச்சத்து, கால்சியம், காய்கறிகள்

பயன்கள்: கழிவுகளை வெளியேற்றி ரத்தத்தைச் சுத்திகரிக்கும். மலச்சிக்கலை நீக்கும். இருமல், கபம், காய்ச்சலை சரிசெய்யும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளதால் பெண்களுக்கு மிகவும் சத்துள்ள சூப் இது.
புதினா, கொத்தமல்லி கீரை வகைகள் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் அளிக்க கூடியவை. இதை வைத்து தயாரிக்கப்படும் சூப்பில் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால் பெண்களுக்கு இது சிறந்த ஒன்றாகும்.

Tags :
|
|