Advertisement

அதிக சுவை மிகுந்த கொண்டைக்கடலை குருமா!

By: Monisha Sat, 21 Nov 2020 5:13:32 PM

அதிக சுவை மிகுந்த கொண்டைக்கடலை குருமா!

அதிக சுவை மிகுந்த கொண்டைக்கடலை குருமா ரெம்ப சுலபமாக செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை - 500 கிராம் (வேகவைத்தது)
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 200 கிராம்
இஞ்சி - 20 கிராம்
பூண்டு - 50 கிராம்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி சிவப்பு
கரம் மசாலா - 1 தேக்கரண்டி

chickpeas,onions,tomatoes,ginger,garlic ,கொண்டைக்கடலை,வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு

செய்முறை
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு மிதமான அனலில் சூடாக்கவும். அரைத்த சாந்தை வாணலியில் போட்டு, லேசாகப் பொன்னிறப் பழுப்பு நிறமாக மாறி வாசம் வரும்வரை வதக்கவும்.

விழுதுடன் உப்பு, சீரகத்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து, 3 நிமிடங்களுக்கு நன்றாகக் வதக்கவும். கலவை நன்கு சூடானதும், தண்ணீரைச் சேர்த்து கெட்டியான குழம்புபோல வரும் வரை கிளறுங்கள். அடுத்து அதைக் கொதிக்கவிடவும்.

வேகவைத்த கொண்டைக்கடலை அதில் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, அவற்றில் சிலவற்றை நசுக்கவும். வாணலியை மூடிவைத்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும். சுவை மிகுந்த கொண்டைக்கடலை குருமா தயார்.

Tags :
|
|