Advertisement

அருமையான சுவையில் காளான் தொக்கு செய்வது எப்படி?

By: Monisha Sat, 24 Oct 2020 7:13:36 PM

அருமையான சுவையில் காளான் தொக்கு செய்வது எப்படி?

மிகவும் அருமையான சுவையை கொண்டிருக்கும் காளான் தொக்கு எப்படி வீட்டில் சமைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
காளான் 200 கிராம்
பெரிய வெங்காயம் 3
தக்காளி 3
பச்சை மிளகாய் 3
கறிவேப்பிலை
எண்ணெய் 50 மில்லி
கடுகு 1 டேபிள் ஸ்பூன்
மல்லி பொடி 2 டேபிள் ஸ்பூன்
சிவப்பு வத்தல் மிளகாய் பொடி 1 டேபிள் ஸ்பூன்
ஜீரக பொடி 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு
மஞ்சள்

mushrooms,onions,tomatoes,chillies ,காளான்,வெங்காயம்,தக்காளி,மிளகாய்

செய்முறை
முதலில் காளானை சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகை போடுங்கள் கடுகு வெடித்ததும். கறிவேப்பிலை போடுங்கள்.

அதன் பிறகு நறுக்கிய பச்சை மிளகாயை போடுங்கள். கூடவே நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வெங்காயம் நன்றாக வதங்கும் வரை கிளறி விடுங்கள். வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்குங்கள். ஒரு 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து விடுங்கள்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மசாலா பொடிகள் வத்தல் பொடி, மல்லி பொடி, ஜீரக பொடி இவைகளை போட்டு நன்றாக வதக்குங்கள். மசாலா சிறிது வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் காளானை போட்டு மசாலா எல்லா இடங்களிலும் படும்படி கிளறி விட்டு ஒரு 5 நிமிடங்கள் வேக வையுங்கள்.

5 நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை நன்றாக கிளறிவிட்டு மீண்டும் ஒரு 5 நிமிடங்கள் வேகவிடுங்கள். 5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து மீண்டும் லேசாக கிளறி விடுங்கள். இப்பொழுது காளான் நன்றாக வெந்து அருமையான காளான் தொக்கு ரெடியாகிவிடும்.

Tags :
|