Advertisement

ருசித்து சாப்பிட மட்டன் உருளைக்கிழங்கு போண்டா செய்முறை

By: Nagaraj Sun, 04 Oct 2020 10:48:16 AM

ருசித்து சாப்பிட மட்டன் உருளைக்கிழங்கு போண்டா செய்முறை

அசைவ உணவில் மட்டன் சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த மட்டனை வைத்து மட்டன் உருளைக்கிழங்கு போண்டா செய்வது எப்படி என்ற தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருள்கள்:


கொத்து கறி - கால் கிலோ
காய்ந்த மிளகாய் - 5
சோம்பு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
மல்லி -3 ஸ்பூன்
நெய் - 3 ஸ்பூன்
பட்டை 1 துண்டு
கிராம்பு 1
பச்சை மிளகாய் 1
உருளைக்கிழங்கு - அரை கிலோ
நறுக்கிய வெங்காயம் - 2
முட்டை - 2
மஞ்சள்பொடி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

bunch curry,dried chillies,anise,cumin,coriander ,கொத்து கறி, காய்ந்த  மிளகாய், சோம்பு, சீரகம், மல்லி

செய்முறை: காய்ந்த மிளகாய் , விட்டுபட்டை,கிராம்பு , சோம்பு, மல்லி, சீரகம் இவற்றை வறுத்து நன்கு அரைத்து கொள்ளவும். கொத்துக்கறியில் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து நன்கு வதக்கி அதில் உள்ள நீர் சுண்டியதும் இறக்கி வைக்கவும்.

கடாயில் நெய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள் போட்டு தாளித்து கறியையும் கொட்டி கிளறி அதனுடன் வேகவைத்து உருளைகிழங்கை தேவையான அளவு உப்பு போட்டு நன்கு மசித்து சின்ன உருண்டைகளாக செய்யவும்.

ஒரு கிண்ணத்தில் முட்டைகளின் வெள்ளைகருவை மட்டும் தனியே எடுத்து அடித்து எடுக்கவும். கடாயில் எண்ணைய் விட்டு காய்ந்ததும், உருண்டைகளை வெள்ளை கருவில் முக்கி, பொரித்து எடுத்தால் அசத்தல் சுவையில் மட்டன் உருளைக்கிழங்கு போண்டா ரெடி.

Tags :
|
|