Advertisement

சத்துக்கள் நிறைந்த வெஜிடபிள் போண்டா செய்முறை

By: Nagaraj Sat, 01 Aug 2020 8:57:18 PM

சத்துக்கள் நிறைந்த வெஜிடபிள் போண்டா செய்முறை

சத்து நிறைந்த வெஜிடபிள் போண்டாவை எளிமையாக செய்யலாம். குழந்தைகளும் விரும்பு சாப்பிடுவார்கள். மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் ஆகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்: கேரட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு- தலா ஒரு கப் (நறுக்கியது), கடலை மாவு- ஒரு கப், அரிசி மாவு- கால் கப், வெங்காயம்- 1 பச்சை மிளகாய்- 2 இஞ்சி- ஒரு துண்டு, மிளகாய்த்தூள்- அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள்-கால் டீஸ்பூன், பேக்கிங் சோடா-கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு- தேவையான அளவு.

vegetable ponda,onion,green chillies,curry leaves ,வெஜிடபிள் போண்டா,  வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை

செய்முறை: ஒரு கிண்ணத்தில் நறுக்கிய காய்கறிகள், கடலை மாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், பேக்கிங் சோடா, உப்பு, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதில் விட்டு பொரிக்கவும். மாவு வெந்து பொன்னிறமானதும் எடுத்து சுடச்சுட பரிமாறவும். அவ்ளோதாங்க.. சுவையான வெஜிடபிள் போண்டா ரெடி..!

Tags :
|