Advertisement

சுவையான முறையில் கடாய் பனீர் செய்முறை

By: Nagaraj Sat, 26 Dec 2020 9:50:34 PM

சுவையான முறையில் கடாய் பனீர் செய்முறை

பனீர் இப்போது குழந்தைகளும் விரும்பி உண்ணும் ஒரு உணவாக மாறிவிட்டது. இதில் கடாய் பனீர் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:


பனீர் - 200 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:


எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 4
பட்டை - 1
பூண்டு - 4 பற்கள்
பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)

pan paneer,salt,oil,onion,tomato ,கடாய் பனீர், உப்பு, எண்ணெய், வெங்காயம், தக்காளி

செய்முறை: முதலில் பனீரை துண்டுகளாக்கி, சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாய் அல்லது வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின் அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, உப்பு தூவி 1 நிமிடம் கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் பனீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கினால், கடாய் பனீர் ரெடி.

Tags :
|
|
|