Advertisement

குழந்தைகள் ரசித்து ருசித்து சாப்பிட பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி செய்முறை

By: Nagaraj Fri, 25 Dec 2020 11:05:05 PM

குழந்தைகள் ரசித்து ருசித்து சாப்பிட பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி செய்முறை

குழந்தைகள் ரசித்து ருசித்து சாப்பிட பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்
பச்சைப் பட்டாணி - ஒரு கப்
கொத்தமல்லித் தழை - அரை கட்டு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
நெய் - எண்ணெய் கலவை
உப்பு - தேவையான அளவு

peas,chapati,coriander,ginger,green chillies ,பட்டாணி, சப்பாத்தி, கொத்தமல்லித்தழை, இஞ்சி, பச்சை மிளகாய்

செய்முறை: பச்சை பட்டாணியை வேகவைத்து கொள்ளவும். கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

வேகவைத்த பச்சை பட்டாணியுடன் கொத்தமல்லித்தழை, இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து சின்னச் சின்ன உருண்டைகள் தயார் செய்யவும். பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சிறிதளவு எடுத்து அதை கிண்ணம் போல் செய்து அதனுள் பட்டாணி விழுது உருண்டையை வைத்து மூடி சப்பாத்திகளாக தேய்க்கவும்.

தோசைக்கல் அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேய்த்து வைத்த சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும் நெய் - எண்ணெய் கலவையை ஊற்றி, இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். சுவையான சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி தயார்.

Tags :
|
|