Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சிவப்புஅவல் கொழுக்கட்டை செய்முறை

By: Nagaraj Thu, 17 Dec 2020 09:08:21 AM

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சிவப்புஅவல் கொழுக்கட்டை செய்முறை

சிவப்பு அவல் கொழுக்கட்டை சுவையானது மட்டுமல்ல சத்தானதும் கூட. குழந்தைகளும் விரும்பி சுவைப்பார்கள்.
இரும்பு சத்து, எளிதில் செரிமானமாகும் தன்மை, குறைவான கலோரி மற்றும் நார்சத்து கொண்டது. நல்ல கார்போஹைட்ரெட் கொண்டதால் அருமையான ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இதை உட்கொள்ளலாம்.

பொதுவாக அவலில் உப்புமா, இனிப்பு அவல் மற்றும் பாயசம் மட்டுமே செய்வதுண்டு, இங்கு கொஞ்சம் வித்யாசமாக அனைவரும் விரும்பி உண்ணும் கொழுக்கட்டை செய்யலாம்,

தேவையான பொருட்கள்


அவல் -1 கோப்பை
வெல்லம் -3/4 கோப்பை
தண்ணீர்-1 கோப்பை
தேங்காய் துருவல்-3 மேஜைக்கரண்டி
முந்திரி -5
நெய்-2 மேஜைக்கரண்டி

aval,jaggery,grated coconut,cashews ,அவல், வெல்லம், தேங்காய் துருவல், முந்திரி

செய்முறை: அவலை வெறும் வாணலியில் இரண்டு நிமிடம் வறுத்து எடுத்துக்கொள்ளவும். சூடு ஆறியதும் மிக்ஸியில் ரவை போல பொடித்து கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தில் பொடித்த அவலை சேர்த்து அதில் 1 கோப்பை நீரை சிறுது, சிறிதாக தெளித்து பிசறி வைத்துக்கொள்ளவும்.(புட்டு போல கட்டிகள் இல்லாமல்)

அடுப்பில் ஒரு கடாய் வைத்து 1 கோப்பை வெல்லம்,1/2 கோப்பை நீர் சேர்த்து கொதிக்க விடவும் கட்டிகள் கரைந்ததும் வடிகட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

இப்போது பிசறி வைத்துள்ள அவல் சேர்த்து கிளறவும், நன்கு கலந்து அடுப்பிலிருந்து எடுத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் நெய் சேர்த்து முந்திரியை பொன்னிறமாக வறுக்கவும், துருவிய தேங்காய் சேர்த்து சிறிது வறுத்து, ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

இப்போது வறுத்த முந்திரியை மாவுடன் சேர்த்து கலந்து விடவும். சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து பரிமாறவும். இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைக்கவும். அருமையான சுவையில் சிவப்பு அவல் கொழுக்கட்டை ரெடி.

Tags :
|