Advertisement

வித்தியாசமான சுவையில் ஜவ்வரிசி உப்புமா செய்வது எப்படி?

By: Monisha Tue, 13 Oct 2020 4:45:09 PM

வித்தியாசமான சுவையில் ஜவ்வரிசி உப்புமா செய்வது எப்படி?

பொதுவாக ஜவ்வரிசி பாயாசம், ஜவ்வரிசி தோசை, ஜவ்வரிசி ஊத்தாப்பம் தான் பார்த்திருப்போம். ஜவ்வரிசிக் கொண்டு உப்புமா செய்யலாம் என்பது தெரியுமா? எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி - 2 கப் (2 நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு 1 (தோல் சீவி, பொடியாக நறுக்கியது)
கேரட் -1 (தோல் சீவி, பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் 1 (பொடியாக நறுக்கியது)
வேர்க்கடலை -3 தேக்கரண்டி (லேசாக பொடித்தது)
மஞ்சள் தூள் -1 சிட்டிகை
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு -1தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேஜை கரண்டி

onions,potatoes,carrots,peanuts,lemon juice ,வெங்காயம்,உருளைக்கிழங்கு,கேரட்,வேர்க்கடலை,எலுமிச்சை சாறு

செய்முறை
முதலில் ஜவ்வரிசியை கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கியவுடன், அதில் ஜவ்வரிசி, கேரட், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து கிளறி, சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். அடுத்து மூடியைத் திறந்து கிளறி, அதில் வதக்கிய உருளைக்கிழங்கு, வேர்க்கடலை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கி, கொத்தமல்லியைத் தூவி பரிமாறினால், சுவையான ஜவ்வரிசி உப்புமா தயார்!

Tags :
|