Advertisement

சுவையான சின்ன வெங்காய சாம்பார் செய்வது எப்படி?

By: Monisha Mon, 23 Nov 2020 2:33:24 PM

சுவையான சின்ன வெங்காய சாம்பார் செய்வது எப்படி?

இட்லி, தோசைக்கு சுவையான சின்ன வெங்காய சாம்பார் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சாம்பார் வெங்காயம் - 20
தக்காளி நடுத்தர அளவு - 1
பச்சை மிளகாய் - 2
துவரம் பருப்பு - 1 கப்
புளி - ஒரு சிறு எலுமிச்சம்பழ அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
க‌டுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காய‌த்தூள் -‍ ஒரு சிட்டிகை
க‌றிவேப்பிலை - சிறிதளவு
கொத்த‌ம‌ல்லித்த‌ழை - சிறிதளவு

small onions,sambar,tomatoes,green chillies,lentils ,சின்ன வெங்காயம்,சாம்பார்,தக்காளி,பச்சை மிளகாய்,பருப்பு

செய்முறை
துவரம்பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீர், சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, குக்கரில் வேக வைக்கவும். புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். 2 கப் அளவிற்கு புளித்தண்ணீர் இருக்கவேண்டும். வெங்காயத்தை தோலுரித்தும், தக்காளியை நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி வைத்து வைக்கவும்.

ஒரு வாண‌லியில் எண்ணெய் விட்டு சூடான‌தும் க‌டுகு போட்டு, பெருங்காய‌த்தூள், வெங்காய‌ம், ப‌ச்சை மிள‌காய், க‌றிவேப்பிலைச் சேர்த்து வ‌த‌க்க‌வும். வெங்காய‌ம் ச‌ற்று வ‌த‌ங்கிய‌வுட‌ன், த‌க்காளி துண்டுக‌ளைச் சேர்த்து ஒரு நிமிடம் வ‌த‌க்க‌வும். பின்ன‌ர் அதில், புளித்த‌ண்ணீர், சாம்பார் பொடி, ம‌ஞ்ச‌ள்தூள், உப்பு சேர்த்து, மூடிவைத்து, மித‌மான‌ தீயில் கொதிக்க‌ விட‌வும்.

குழ‌ம்பு கொதிக்க‌ ஆர‌ம்பித்த‌தும், வெந்த‌ப் ப‌ருப்பை ம‌சித்து சேர்க்க‌வும். ந‌ன்றாக‌க் கிள‌றி மீண்டும் கொதிக்க‌ விட‌வும். சாம்பார் கொதித்து, ச‌ற்று கெட்டியான‌தும், கீழே இற‌க்கி கொத்தும‌ல்லி தூவ‌வும். சுவையான வெங்காய சாம்பார் தயார்.

Tags :
|