Advertisement

அசத்தலான சுவையில் ரவை ரொட்டி செய்வது எப்படி?

By: Monisha Tue, 27 Oct 2020 11:40:04 AM

அசத்தலான சுவையில் ரவை ரொட்டி செய்வது எப்படி?

விதவிதமா சமையல் செய்ய ஆசை படுறீங்களா? உங்களுக்காக எளிமையான முறையில் ரவையில் ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
ரவை மாவு – 1 கப்
துருவிய வெள்ளரிக்காய் – 1 1/2 கப்
தேங்காய் பொடி – 3/4 கப்
கொத்தமல்லி இலை – 1 கைப்பிடியளவு நறுக்கியது
பச்சை மிளகாய் – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

semolina,cucumber,coconut,chilli,taste ,ரவை,வெள்ளரிக்காய்,தேங்காய்,மிளகாய்,சுவை

செய்முறை
முதலாவது துருவிய வெள்ளரிக்காய், ரவை, தேங்காய், கொத்தமல்லி தழை, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பை சேர்த்து நன்கு கலந்து சப்பாத்தி மாவு பருவத்திற்கு கொண்டு வர வேண்டும். அதன்பின் இந்த மாவினை சப்பாத்தி செய்வதற்கு சிறு உருண்டைகளாக உருட்டுவது போல உருட்டி வைத்து அதனை சப்பாத்தி கல்லில் வைத்து ரொட்டி போல வட்டமாக அழுத்தி எடுத்துக் கொள்ளுங்கள்.

அதன்பின் மிதமான தீயில் வைத்து ரொட்டியை இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாகும் வரை 5 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இந்த சுவையான ரொட்டியுடன் உங்க விருப்பத்துக்கேற்ப குளம்பு வகைகளை வைத்து சாப்பிடுங்க.

Tags :
|