Advertisement

சாம்பார் சாதத்திற்கு ஏற்ற சூப்பர் சுவையில் சேனைக்கிழங்கு வறுவல்

By: Nagaraj Sat, 29 Aug 2020 08:09:39 AM

சாம்பார் சாதத்திற்கு ஏற்ற சூப்பர் சுவையில் சேனைக்கிழங்கு வறுவல்

சாம்பார் சாதத்திற்குப் பலரும் உருளைக்கிழங்கு வறுவலையே விரும்பி சாப்பிடுவர். இன்னும் அதிக சுவை மிகுந்த சேனைக் கிழங்கில் வறுவல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:

சேனைக்கிழங்கு - 2 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 4
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

sweet potato,roast,curry leaves,chilli powder ,சேனைக்கிழங்கு, வறுவல், கறிவேப்பிலை, மிளகாய்த் தூள்

செய்முறை: சேனைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், அடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட்டு இறக்கவும். அடுத்து வரமிளகாய், பூண்டு, சோம்பு போன்றவற்றினை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து சேனைக்கிழங்கை கிணத்தில் போட்டு, மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து கலந்து ஊறவிடவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சேனைக்கிழங்கு, உப்பு சேர்த்து வறுக்கவும்.
டேஸ்ட்டியான சேனைக்கிழங்கு வறுவல் ரெடி.

Tags :
|