Advertisement

சூப்பர் சுவையில் மட்டன் சுக்கா செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Sun, 18 Oct 2020 7:09:24 PM

சூப்பர் சுவையில் மட்டன் சுக்கா செய்முறை உங்களுக்காக!!!

மட்டனில் குழம்பு, கிரேவி, வறுவல், பிரியாணி என நாம் பலவகையான ரெசிப்பிகளை சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இப்போது சூப்பர் சுவையில் மட்டனில் சுக்கா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:

மட்டன் - 1/4 கிலோ
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
பட்டை - 1
வெங்காயம் - 2
வெண்ணெய் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

mutton,pepper powder,lemon juice,coriander,to taste ,மட்டன், மிளகுத் தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி, சுவை

செய்முறை: மட்டனை கழுவி மஞ்சள் தூள் போட்டு சுத்தம் செய்யவும். அடுத்து அதனுடன் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு , தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும். அடுத்து வாணலியில் எண்ணெய் மற்றும் பட்டர் போட்டு பட்டை, வெங்காயம் போட்டு வதக்கவும்.

அடுத்து மட்டன் மிளகுத் தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தூவி சிறிது 3 நிமிடங்கள் கழித்து இறக்கினால் மட்டன் சுக்கா ரெடி. அருமையான சுவையில் இருக்கும் இதை உங்கள் குடும்பத்தினர் விரும்பி சாப்பிட்டு பாராட்டுவார்கள்.

Tags :
|