Advertisement

சூப்பரான தட்டப்பயறு காய்கறி சாலட் செய்வது எப்படி?

By: Monisha Fri, 07 Aug 2020 4:35:07 PM

சூப்பரான தட்டப்பயறு காய்கறி சாலட் செய்வது எப்படி?

தட்டப்பயறில் கலோரிகளும் கொழுப்பும் குறைவாகவே உள்ளது. இன்று நாம் உடல் எடையை குறைக்க உதவும் தட்டப்பயறு காய்கறி சாலட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் - 1
தட்டப்பயறு - 50 கிராம்
தக்காளி - 1
சிவப்பு குடைமிளகாய் - 1
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
இந்துப்பு, மிளகுத்தூள் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை
தட்டப்பயறை வேக வைத்து கொள்ளவும். வெள்ளரிக்காய், தக்காளி, குடைமிளகாய், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த தட்டப்பயறை போட்டு அதனுடன் காய்கறிகளை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அடுத்து அதில் உப்பு, மிளகுத் தூள், தேங்காய்த் துருவல், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி கலந்து கலக்கிப் பரிமாறலாம். சூப்பரான தட்டப்பயறு காய்கறி சாலட் ரெடி.

Tags :
|