Advertisement

தாய் ஃப்ரைட் ரைஸ் எப்படி செய்வது?

By: Monisha Thu, 15 Oct 2020 5:35:17 PM

தாய் ஃப்ரைட் ரைஸ் எப்படி செய்வது?

சுவையான தாய் ஃப்ரைட் ரைஸ் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையானவை
500 கி சாதம்
1 மேசைக்கரண்டி எண்ணெய்
1/2 மேசைக்கரண்டி பூண்டு பேஸ்ட்
2 முட்டைகள்
50 கி காரட், நறுக்கியது
50 கி கோஸ், நறுக்கியது
50 கி ஃப்ரெஞ்ச் பீன்ஸ், நறுக்கியது
1/2 மேசைக்கரண்டி உப்பு
30 மிலி, வெஜிடபிள் ஸ்டாக்
4 சிறிய மிளகாய்கள்
1 மேசைக்கரண்டி மிளகு தூள்
2 மேசைக்கரண்டி வெங்காய தாள்கள், சிறிதாக நறுக்கியது

rice,eggs,carrots,beans,fried rice ,சாதம்,முட்டை,காரட், பீன்ஸ்,ஃப்ரைட் ரைஸ்

செய்முறை
எண்ணெயை சூடாக்கி, அதில் பூண்டு பேஸ்டை இட்டு வதக்கவும், பிறகு, முட்டைகள், காரட் மற்றும் கோஸைச் சேர்க்கவும். பிரெஞ்ச் பீன்ஸைச் சேர்த்து, தொடர்ந்து கலக்கவும், முட்டை வெந்து, காய்கறிகள் மிருதுவாகத் தொடங்கும் வரை தொடர்ந்து கிளறி விடவும். சாதத்தை இதில் கொட்டி, நன்கு கலக்கவும். உப்பு, வெஜிடபிள் ஸ்டாக், மிளகாய் மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். நன்கு கலக்கவும். வெங்காய தாள்களால் அலங்கரிக்கவும்.

Tags :
|
|
|