Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வாழைப்பழ குழிப்பணியாரம்

By: Nagaraj Sat, 17 Oct 2020 6:02:24 PM

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வாழைப்பழ குழிப்பணியாரம்

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான வாழைப்பழ குழிப்பணியாரம் செய்யும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

ரவை – 1/4 கிலோ,
வாழைப்பழம் – 2,
முட்டை – 2
மைதா – 1 கப்
வெல்லம் (அல்லது) சர்க்கரை – 1/4 கப்,
ஏலக்காய்பொடி – சிறிதளவு
நிலக்கடலை – 10கிராம்
பொரிக்க எண்ணெய் – தேவைக்கு

banana,maida,eggs,groundnuts,cardamom ,வாழைப்பழம், மைதா, முட்டை, நிலக்கடலை, ஏலக்காய்

செய்முறை : ரவையை மிதமான சூட்டில் 5 நிமிடத்திற்கு வறுத்துக்கொள்ளவும், ஒரு பாத்திரத்தில் மைதா, முட்டை, வாழைப்பழம், நிலக்கடலை, ஏலக்காய்பொடி, வெல்லம் (அல்லது) சர்க்கரை இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனை 5 மணி நேரத்திற்கு அப்படியோ மூடி வைக்கவும்.

கலவை தயார் ஆனதும் குழிப்பணியார சட்டியில் நெய்விட்டு பணியாரத்தை வார்த்து எடுக்கவும், சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பழ குழிப்பணியாரம் ரெடி.

Tags :
|
|
|