Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிட தக்காளி இனிப்பு பச்சடி செய்முறை

By: Nagaraj Sun, 18 Oct 2020 7:29:18 PM

குழந்தைகள் விரும்பி சாப்பிட தக்காளி இனிப்பு பச்சடி செய்முறை

குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் இனிப்பு தக்காளிப் பச்சடி செய்து கொடுத்து அசத்துங்கள். தக்காளியில் தொக்கு, கடைசல், பச்சடி, சட்னி எனப் பல வகையான ரெசிப்பிகள் செய்து சாப்பிட்டு இருப்போம், அந்த வகையில் இப்போது தக்காளியில் இனிப்பு பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

தக்காளிப் பழம் -3
சர்க்கரை- 5 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த் தூள்- கால் டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு-8
உலர்ந்த திராட்சை -5
நெய்-1 டேபிள் ஸ்பூன்

tomatoes,raisins,ghee,pickles,sugar ,தக்காளி, உலர்ந்த திராட்சை, நெய், பச்சடி, சர்க்கரை

செய்முறை: தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். அடுத்து பாத்திரத்தில் நெய் விட்டு தக்காளியை வதக்கி அரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

பின்னர் தக்காளியை மசித்து, சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும்.
அடுத்து நன்கு கிளறி நெய்யில் முந்திரி திராட்சையினை வறுத்து ஏலப்பொடி சேர்த்து இறக்கினால் இனிப்பு தக்காளிப் பச்சடி ரெடி. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதை சப்பாத்தியில் தடவி ரோல் செய்தும் கொடுக்கலாம்.

Tags :
|