Advertisement

அசைவ உணவு பிரியர்களுக்காக தக்காளி மீன் வறுவல் செய்முறை!!!

By: Nagaraj Sat, 15 Aug 2020 5:08:02 PM

அசைவ உணவு பிரியர்களுக்காக தக்காளி மீன் வறுவல் செய்முறை!!!

அசைவ உணவு பிரியர்களுக்கு வறுத்த மீன் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் தக்காளி மீன் வறுவல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
தக்காளி – 4
மீன் – 1/4 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பொடித்த சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தனியா தூள் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

tomatoes,fish pieces,cumin powder,salt,turmeric powder ,தக்காளி, மீன் துண்டுகள், தனியா தூள், உப்பு, மஞ்சள் தூள்

செய்முறை: தக்காளியை மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடித்த சோம்பு, மிளகுத்தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.

பிறகு மீன் துண்டுகளின் மீது மசாலா தடவி, சிறிது நேரம் ஊறிய பிறகு எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள். அவ்வளவுதான் சுவையான தக்காளி மீன் வறுவல் தயார்.

Tags :
|