Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • குழந்தைகளை பராமரிக்க அப்பாக்கள் தயாராக வேண்டும்

குழந்தைகளை பராமரிக்க அப்பாக்கள் தயாராக வேண்டும்

By: Karunakaran Thu, 12 Nov 2020 1:35:21 PM

குழந்தைகளை பராமரிக்க அப்பாக்கள் தயாராக வேண்டும்

கொரோனாவால் பெண்களின் சமையல் பணிகளில் ஆண்களும் இணைந்திருக்கிறார்கள். இதனால் குடும்பமே மகிழ்ந்துகொண்டிருக்கிறது. பெண்களின் வேலை என்று கருதப்பட்ட, குழந்தை வளர்ப்பிலும் கூட இனி மாற்றம் ஏற்படப்போகிறது. இதனால் சமூகத்தில் குழந்தை வளர்ப்பதிலும் புதிய மாற்றங்கள் உருவாகும். பொதுவாக குழந்தைகள் அப்பாவைவிட, அம்மாவிடம்தான் அதிக நெருக்கம் காட்டும். அது உடலியல், விஞ்ஞானம், தாய்மை ரீதியான உண்மை.

தாயின் அரவணைப்பில் மட்டுமே குழந்தைகள் பாதுகாப்பையும், சவுகரியத்தையும் உணரும். ஆனால் காலத்தின் கட்டாயமாக அதை அப்பாக்களும் செய்ய வேண்டியதாகிவிட்டது. மேலை நாடுகளில், குழந்தைகள் பராமரிப்பில் அப்பாக்களும் ஈடுபடவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு, அமெரிக்காவில் இதற்கென ஆண்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இங்கு அப்பாக்கள் குழந்தைகளை பராமரிக்க தயாராகவே இருந்தாலும், குழந்தைகள் முதலில் அம்மாவை பிரியவும், அப்பாக்களின் பராமரிப்பை ஏற்றுக்கொள்ளவும் தயங்கத்தான் செய்கின்றன.

dads,parents,care,children ,அப்பாக்கள்,பெற்றோர்கள் , கவனிப்பு, குழந்தைகள்

மனைவியோடு சேர்ந்து கணவரும் குழந்தையோடு ஒட்டி உறவாடி பிணைப்பை உருவாக்குகிறார். நாளடைவில் அம்மாக்கள் பிரிந்து வேலைக்கு சென்றாலும், அப்பாவின் அருகாமை மூலம் குழந்தைகள் திருப்தியடைகின்றன. குழந்தை வயிற்றில் இருக்கும்போதே, வெளியே உள்ள சத்தங்களை அதனால் உணர்ந்துகொள்ள முடியும். அதில் முக்கியமாக தாய் மற்றும் தந்தையின் குரலைதான் குழந்தைகள் அடிக்கடி கேட்டு உணர்ந்து கொள்கின்றன. பிறந்ததும் அந்த குரலுக்கு சொந்தமானவர்களை அறிந்து, அவர்களோடு நெருங்கிவிடும் தன்மை குழந்தைக்கு உண்டு.

குழந்தைகள் தந்தையின் அரவணைப்பை எளிதாக ஏற்றுக்கொள்ள .‘அப்பா நம்மை நன்றாக கவனித்துக்கொள்வார்’ என்ற நம்பிக்கை அவசியம். இவை அனைத்தும் கிடைத்துவிட்டால், குழந்தை அப்படியே அப்பாவோடு ஒட்டிக்கொள்ளும். அம்மாக்களிடம் மட்டுமே பொறுமை உண்டு என்று நினைப்பது தவறு. அப்பாக்கள் தங்கள் பொறுப்பை உணரும்போது அதிக பொறுமைசாலிகளாக ஆகிவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு எந்த உணவு பிடிக்கவில்லை என்பதை அதன் முக மாற்றத்தால் அப்பாக்களால் விரைவாக உணர்ந்துகொள்ள முடிகிறது. அம்மாக்களாவது, உணவை திணிப்பார்கள். அப்பாக்கள் திணிக்காமல் ருசிக்க வைப்பார்கள் என அப்பாக்களுக்கு பயிற்சி தரும் அமெரிக்க நிறுவனங்கள் சொல்கின்றன

Tags :
|
|