Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • அம்மாவுடனே தூங்கவிரும்பும் பிள்ளைகளுக்கு ஆளுமைத்திறன் குறையுமா ?

அம்மாவுடனே தூங்கவிரும்பும் பிள்ளைகளுக்கு ஆளுமைத்திறன் குறையுமா ?

By: Karunakaran Fri, 20 Nov 2020 2:24:54 PM

அம்மாவுடனே தூங்கவிரும்பும் பிள்ளைகளுக்கு ஆளுமைத்திறன் குறையுமா ?

எல்லா குழந்தைகளும், எப்போதும் அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்னஅசைவில் இருந்து கூட அது கண்டு கொண்டு விடுகிறது. அடுத்த கணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை உறுதி செய்து கொள்கிறது. பாதுகாப்பு உணர்வோடு அம்மாவுடனே குழந்தைகள் தூங்க விரும்பும். அதே குழந்தைகள் பத்து வயதைக் கடக்கும்போது பிரச்சினைகள் உருவாகிறது. 15 வயதுக்கு மேலும் அப்படி அம்மாவுடனே தூங்கவிரும்பும் பிள்ளைகளுக்கு ஆளுமைத்திறன் குறைந்திருப்பதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அவர்கள் எல்லா விஷயத்திலும் ‘அம்மா பிள்ளை’யாகவே இருந்து இளம்வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள். அதே நேரத்தில் சிறுகுழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. சில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவதில்லை. அதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள். இம் மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரல் கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள்.

children,sleep,mother,less personality ,குழந்தைகள், தூக்கம், தாய், குறைந்த ஆளுமை

குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்கவைப்பவர்கள் தங்கள் ‘இரவுநேர நெருக்கத்திற்கு’ இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு. அந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு. இரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்கவைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா-பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலுக்குத் தப்பி விடுகிறது.

முதல் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக எண்ணாத அளவுக்கு அந்தக் குழந்தையையும் தங்கள்அன்பால் ஈர்த்துக் கொள்ளவேண்டும். தாய் அருகே ஒரு குழந்தை படுத்துக் கொண்டால் அடுத்த குழந்தை தந்தையின் அருகே படுக்க வைக்கப்பட வேண்டும். இப்படிச்செய்யும்போது தாயிடம் காட்டும் பாசத்துக்கு இணையாக தந்தையிடமும் குழந்தைகள் ஒட்டிக்கொள்ளும். நான்கு- ஐந்து வயது பருவத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். ஏழெட்டு வயதில் குழந்தைகள் சிறுவர்- சிறுமியர் என்ற பருவத்தை அடைகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள்.

Tags :
|
|