Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • உங்கள் திருமண வாழ்க்கை தோல்வியினால் உங்கள் குழந்தையைப் பாதிப்படைய விடாதீர்கள்

உங்கள் திருமண வாழ்க்கை தோல்வியினால் உங்கள் குழந்தையைப் பாதிப்படைய விடாதீர்கள்

By: Karunakaran Thu, 31 Dec 2020 2:50:23 PM

உங்கள் திருமண வாழ்க்கை தோல்வியினால் உங்கள் குழந்தையைப் பாதிப்படைய விடாதீர்கள்

ஒரு விவாகரத்தில், மிகவும் அதிகமாக பாதிக்கப்படுவது பெரும்பாலும் குழந்தைகள்தான், ஏனெனில் ஒரு தவறும் செய்யாமலே, இரண்டு பெற்றோரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு ஆளாவது அவர்கள்தான். ஒன்று அல்லது இரண்டு பெற்றோரிடம் இருந்தும் உணர்வு ரீதியாக விலகி இருப்பதால், அவர்கள் ஏராளமான, ஆழமான சோகத்திற்கு ஆளாகின்றனர்.

குழந்தைகளுடன் போதுமான அளவு நேரத்தை முறையாக நீங்கள் ஒதுக்க வேண்டும், அவர்களுடைய தினசரி வழக்கங்கள் செயல்பாடுகளில் நீங்கள் அதிக ஆர்வமும் அக்கறையும் செலுத்த வேண்டும். அவர்களுடன் விளையாட நேரம் ஒதுக்குங்கள், தாய்-குழந்தைக்குமான பிரத்யேக உறவை உருவாக்க போதுமான விசேஷ நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

child,failure,marriage,divorce ,குழந்தை, தோல்வி, திருமணம், விவாகரத்து

பெரும்பாலான சிறு குழந்தைகளுக்கு, தங்கள் பெற்றோர்கள் ஏன் பிரிந்து போகின்றனர் என்று புரிவதில்லை, வளர்ந்த குழந்தைகள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைக்கிறார்கள். நேரம் எடுத்து, பொறுமையாக அவர்களுக்கு விளக்கிக் கூற வேண்டியது உங்களுடைய பொறுப்பு. உங்கள் குழந்தைகள் உங்களை நம்புவதற்கு அடிப்படையாக இருப்பது, இரண்டு பெற்றோரும் ஒன்றாக இருக்கும்போது பாதுகாப்பாக உணர்வதே.

உங்கள் குழந்தையின் மேல் அக்கறை காட்டுவதே உங்களுக்கான புதிய இலக்காக இருக்க வேண்டும். உங்கள் முன்னாள் கணவருடன் இணக்கமான உறவு இருந்தால், சில வாரங்களுக்கு ஒருமுறை இருவரும் சேர்ந்து குழந்தைகளுடன் வெளியே செல்ல திட்டமிடுங்கள். குழந்தைகளின் வாழ்க்கையில் புதிய நபர்கள் அறிமுகமாகும்போது, அதாவது உங்களுக்கோ, உங்கள் துணைவருக்கோ புதிய வாழ்க்கைத் துணை வரும்போது, அவர்களை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்துங்கள். உங்கள் குழந்தைகள் அவர்களைப் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அன்பாகவும் அரவணைப்பாகவும் உணர்த்திடுங்கள்.

Tags :
|