Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • நம்மை எப்படி கவிழ்ப்பது என சிந்திக்கும் தோழிகள்

நம்மை எப்படி கவிழ்ப்பது என சிந்திக்கும் தோழிகள்

By: Karunakaran Fri, 16 Oct 2020 7:29:32 PM

நம்மை எப்படி கவிழ்ப்பது என சிந்திக்கும் தோழிகள்

உங்கள் தோழிகளிடம் நல்லமுறையில் பழகுங்கள். அவர்களுக்கு நல்லதை மட்டுமே செய்யுங்கள். அவ்வாறு நல்ல எண்ணங்களோடு நீங்கள் பழகினால், அவர்களுக்கு மட்டுமல்ல பழகும் உங்களுக்கும் மனநலமும், உடல் நலமும் மேம்படும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நல்ல எண்ணங்களோடு நீங்கள் அடுத்தவர்களிடம் பழகினால் உங்கள் மனம் மகிழும். அதன் மூலம் உங்கள் ஆயுள் பெருகும். அமைதியாக தூங்குவீர்கள். மனஇறுக்கமின்றி நிம்மதியாக வாழ்வீர்கள்.

தோழிகளிடம் உள்ஒன்று வைத்து வெளிஒன்று பேசிக்கொண்டிருந்தாலும், அவர்களை எப்படி கவிழ்ப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தாலும் உங்களுக்கு மனஅழுத்தம் அதிகரித்துவிடும். நிம்மதியை இழந்துவிடுவீர்கள். நீங்கள் உங்கள் தோழிகளுக்கு கெடுதல் செய்யக்கூடாது என்று கூறும் அந்த உளவியல் ஆய்வு, உங்களுக்கு கெடுதல் செய்ய நினைக்கும் தோழி களை எப்படி அடையாளம் கண்டு ஒதுக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. நெருக்கமான தோழிகளை படிப்பிலோ, வேலையிலோ, பதவியிலோ அவர்களுடன் போட்டிபோடும் சூழ்நிலை உருவாகும்போது தான் அவர்களது உண்மையான குணாதிசயம் என்னவென்று உங்களுக்கு தெரியவரும்.

friends,overthrow,girls,depression ,நண்பர்கள், தூக்கி எறி, பெண்கள், மனச்சோர்வு

சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்ப்பது கிடைக்காமல் போயிருக்கும். அதன் பின்னணியை ஆராய்ந்தால், அதற்கு உங்களுக்கு நெருக்கமான தோழிகளே கூட காரணமாக இருப்பது தெரியவரும்.
அப்படிப்பட்ட மோசமான தோழிகளை நீங்கள் அடையாளம் காண்பது எளிது. அவர்கள் உங்கள் மீது அதிக அக்கறைகொண்டவர் போன்று காட்டிக்கொண்டு, உங்களை பற்றிய அனைத்து விஷயங்களையும் அறிந்து வைத்துக் கொள்வார்கள். உங்களது அந்தரங்க பக்கங்கள், ரகசிய விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ரொம்ப ஆர்வம் காட்டுவார்கள். இப்படிப்பட்டவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

சில தோழிகள் அதிக உரிமை எடுத்து உங்களிடம் பழகுவதோடு, திட்டமிட்டு உங்களை தவறான வழிகளிலும் ஈடுபடுத்த முயற்சி செய்வார்கள். உங்களுக்கு யாரெல்லாம் நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்களால்தான், தேவையில்லாத பழக்கவழக்கங்களில் உங்களை ஈடுபடுத்த முடியும். சமூகம் புறக்கணிக்கும் தவறான விஷயங்களை, தவறல்ல என்று கூறிக்கொண்டு அதை அனுபவிக்க வலியுறுத்தும் நட்பு வட்டாரத்திடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தோழிகளில் சிலர் புகழ்ந்து பேசியே குழிபறிக்கும் வேலையிலும் ஈடுபடுவார்கள். உங்கள் வளர்ச்சி பிடிக்காத இவர்கள் நீங்கள் எழுச்சி பெறும்போதெல்லாம், முரண்பாடான ஆலோசனைகளை கூறி உங்களை கவிழ்ப்பார்கள். இவர்களிடம் இருந்து முழுமையாக ஒதுங்கிவிடுங்கள்.

Tags :
|