Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • உங்கள் காதலனை நன்றாக புரிந்து கொள்வது எப்படி?

உங்கள் காதலனை நன்றாக புரிந்து கொள்வது எப்படி?

By: Monisha Thu, 03 Sept 2020 5:40:49 PM

உங்கள் காதலனை நன்றாக புரிந்து கொள்வது எப்படி?

ஒவ்வொரு பெண்ணுக்கும் தன காதலன் அல்லது கணவனை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அப்படி தெரிந்து கொள்ளும் போது தான் அந்த உறவில் அவர்களின் நிலை என்னவென்று அவர்களுக்கு புரியும். அல்லது அந்த உறவில் உள்ள அர்த்தத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். உங்கள் கணவன் அல்லது காதலனை சுலபமாக புரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை. அவரை பற்றி ஆழமாக தெரிந்து கொள்ள நீங்கள் முற்படும் போது அதனை நீங்கள் மென்மையாக கையாள வேண்டும். பொதுவாக ஆண்கள் தங்களை பற்றிய விஷயங்களை அவ்வளவு சுலபத்தில் திறப்பதில்லை. அவர்களுக்கென ஒரு வேலி போட்டு கொண்டு வாழ்வார்கள். அதனால் அவர்களை பற்றி தெரிந்து கொள்வதில் அதிக சிரத்தை எடுக்க வேண்டி வரும்.

அவரை பற்றி நன்றாக புரிந்து கொள்ள அவரை பற்றிய தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பொறுமையை முக்கிய ஆயுதமாக பயன்படுத்த வேண்டும். உங்கள் உறவில் அவரை பற்றி தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளது. அவரை பற்றி நன்றாக தெரிந்து கொள்வதால் சில எதிர்மறையான ஆச்சரியங்கள் வெளிப்படுவதை நீங்கள் தவிர்க்கலாம். ஒருவரையொருவர் நன்றாக தெரிந்து கொண்டு புரிந்து வைத்திருந்தால் இருவரின் உறவும் திடமாக இருக்கும். சரி இப்போது காதலன் அல்லது கணவரை நன்றாக புரிந்து கொள்வது எப்படி? என்று தெரிந்து கொள்ளலாம்.

women,boyfriend,husband,relationship,patience ,பெண்கள்,காதலன்,கணவன்,உறவு,பொறுமை

மெதுவாக ஆரம்பியுங்கள்
உங்கள் உறவு ஆரம்பித்த கால கட்டத்தில் நம்பிக்கையை வலுப்படுத்தி ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த காலத்தில் அவரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதை பொறுத்து தான் அவர் உங்கள் கனவு கண்ணனா அல்லது உங்களை பிடிக்க போகும் சனியா என்பதை தீர்மானிக்க முடியும். இருப்பினும் அவரை பற்றி அறிந்து கொள்வதை நீங்கள் துரிதப்படுத்தினால் அதுவே கூட உங்கள் உறவு முடிவதற்கு ஒரு காரணமாக அமையலாம்.

கேள்விகள்
உங்கள் காதலன் உங்களிடம் அந்தரங்கமாக பேச ஆரம்பித்து விட்டால் அவரை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆரம்பியுங்கள். அவர் கூறும் பதிலில் இருந்து அடுத்த கேள்வியை கேட்டு அவரை பற்றி தெரிந்து கொள்ள முற்படுங்கள். அவருக்கு பிடித்த விளையாட்டு குழுவை கேட்டால் அதோடு நிற்காமல் அதில் அவருக்கு பிடித்த விளையாட்டு வீரர் யார் என்பதை கேளுங்கள். அதற்கு வரும் பதிலில் இருந்து அப்படியே அடுத்த கேள்வியை ஆரம்பியுங்கள். இவ்வழியை பின்பற்றி அவரை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளலாம். அவரும் அவருடைய விருப்பு வெறுப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வார்.

கொடுத்து வாங்கல்
உங்களுக்கு அவரை பற்றி எந்தளவுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமோ அதே அளவு அவருக்கும் உங்களை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும் அல்லவா? அவரை கேள்விக்கனலால் துளைத்து எடுப்பதற்கு பதிலாக அவர் கூறுவதற்கு பதிலளிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் பேசும் போது மற்றவர் கவனித்தால் மட்டுமே ஒரு நல்ல உரையாடல் நடைபெறும்.

women,boyfriend,husband,relationship,patience ,பெண்கள்,காதலன்,கணவன்,உறவு,பொறுமை

அவரின் நண்பர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
அவரின் நண்பர்களுக்கு நீங்களும் நெருங்கிய நண்பராக இருந்தாலும் சரி அல்லது பெயரளவுக்கு அவர்களை தெரியும் என்றாலும் சரி, அவர்களை சந்தித்து அவர்களை பற்றி தெரிந்து கொண்டால், உங்கள் காதலன் அல்லது கணவனோடு உங்கள் நெருக்கத்தை அதிகரிக்க இது உதவும். தன் காதலனை பற்றி காதலிக்கு தெரியாத பல விஷயங்கள் அவருடைய நண்பர்களுக்கு தெரியக் கூடும். அதனால் அவர்களிடம் இருந்து கூட பல விஷயங்கள் உங்களுக்கு தெரிய வரும்.

அவரின் வேலையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
அவரின் வேலையை பற்றியும் வேலையில் அவரின் மனக்கிளர்ச்சி பற்றியும் தெரிந்து கொண்டால் அவரை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ளலாம். அவரின் வேலையை பற்றி பேசத் தொடங்கலாம், அன்றைய பொழுதில் அவரின் வேலை எப்படி இருந்தது போன்றவைகளை பற்றியெல்லாம் பேசலாம். அலுவலக பார்ட்டிகள் அல்லது அலுவலக சந்திப்புகளில் அவருடன் வேலை செய்பவர்களிடமும் பேசும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

நன்றாக காது கொடுத்து கேட்பவராக இருக்க வேண்டும்
அவரை பற்றி தெரிந்து கொள்ள இதை விட எளிய வழி எதுவுமே இல்லை. அவர் பேசும் போதோ அல்லது தன்னுடைய கனவு மற்றும் லட்சியங்களை சொல்லும் போதோ பெயரளவுக்கு கேட்காமால் ஆர்வத்துடன் கவனியுங்கள். அவர் ஏற்கனவே சொன்னதை மீண்டும் கூறினால் அதனை குறைகூறாமல் ஆர்வத்துடன் கேளுங்கள்.

Tags :
|