Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • துணையிடம் மறைத்து மாட்டிக்கொண்டீர்களா? இப்படி செய்து சமாதானப்படுத்துங்க!

துணையிடம் மறைத்து மாட்டிக்கொண்டீர்களா? இப்படி செய்து சமாதானப்படுத்துங்க!

By: Monisha Mon, 20 July 2020 5:24:41 PM

துணையிடம் மறைத்து மாட்டிக்கொண்டீர்களா? இப்படி செய்து சமாதானப்படுத்துங்க!

துணையிடம் மறைத்து செய்த விஷயத்தால் மாட்டிக்கொண்டீர்கள் எனில் பிரச்னையின்றி சமாளிக்க ஒப்புக்கொண்டு சரண்டர் ஆவதுதான் ஒரே வழி. இல்லையெனில் பிரச்னை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகும். அதற்கு என்ன செய்து துணையை சமாதானப்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

நான் செய்தது தவறுதான் என தவறை ஏற்றுக்கொண்டு அதை வெளிப்படையாகக் கூறுங்கள். தவறு மொத்தத்தையும் உங்களுக்கானதாக ஏற்றுக்கொள்ளுங்கள். தவறி கூட உங்கள் மனைவியை காரணம் காட்டி பழி போட்டு காரணத்தை அவர் மீது திசை திருப்பிவிடாதீர்கள். பிரச்னை வேறு விதமாக வெடித்துவிடும்.

மாட்டிக்கொண்டீர்கள் எனில் ஆமாம் செய்தேன் என சண்டையிடாமல் அவர் எவ்வளவு கோபப்பட்டாலும் பொறுமையாக இருங்கள். பின்பு ஏன் அவ்வாறு பொய் கூறினீர்கள் என்பதை விளக்குங்கள். மனம் விட்டு பேசுங்கள். உங்கள் தரப்பு நியாயத்தை கூறி சமாதானம் செய்யுங்கள்.

husband,wife,partner,peace,relationship ,கணவன்,மனைவி,துணை,சமாதானம்,உறவு

சமாளிக்கவும், சமாதானப்படுத்தவும் அந்த இடத்தில் மீண்டும் பொய்களை அடுக்காதீர்கள். அதுவும் ஒருநாள் தெரிந்துவிட்டால் உங்கள் மீதான நம்பிக்கை போய்விடும். எனவே மாட்டிக்கொண்டோம் என்றாகிவிட்ட நிலையில் உண்மையை கூறி மன்னிப்பு கேட்பதே நல்லது.

உண்மையிலேயே அந்த தவறு செய்ய உங்கள் மனைவிதான் காரணமெனில் அதை அப்போதே உடைக்காமல் சமாதானம் ஆன பிறகு பொறுமையாக எடுத்துக்கூறுங்கள். அவர் சண்டையிட்டாலும் பதிலுக்குக் கோபப்படாதீர்கள்.

இனியும் இப்படி பொய் கூற மாட்டேன் என நம்பிக்கை வாக்குறுதி அளியுங்கள். ஏனெனில் பொய் என்பது நம்பிக்கைக்கு எதிரானது. நம் நம்பிக்கைக்குறியவர் பொய் கூறிவிட்டார் எனில் அதைவிட மிகப்பெரிய வலி எதுவுமில்லை. எனவே அதை உணர்ந்து அவரிடம் இனி பொய் கூற மாட்டேன் என உறுதி அளியுங்கள். உங்கள் மீதான நம்பிக்கைக்கு களங்கமில்லாமல் நடந்துகொள்ளுங்கள்.

Tags :
|
|