Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • லிவிங் டு கெதர் வாழ்க்கையில் அடி எடுத்து வைக்க போகிறீர்களா? இதை கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்!

லிவிங் டு கெதர் வாழ்க்கையில் அடி எடுத்து வைக்க போகிறீர்களா? இதை கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்!

By: Monisha Sun, 20 Dec 2020 6:27:56 PM

லிவிங் டு கெதர் வாழ்க்கையில் அடி எடுத்து வைக்க போகிறீர்களா? இதை கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்!

நாகரிகம் வளர வளர உறவுகளில் மாற்றங்கள் வருவதும் இயற்கையான ஒன்றுதான். இதனை ஏற்று கொள்வதும் இல்லாமல் போவதும் மற்றவர்களின் கருத்துரிமை. தற்போதைய காலகட்டத்தில் திருமணங்களை விட லிவிங் டு கெதர் வாழ்க்கை அதிகரித்து வருகிறது. இந்த பதிவில் லிவிங் டு கெதர் வாழ்க்கைக்கு முன்னர் தெரிந்து கொள்ள வேண்டிய சிலவற்றை பார்ப்போம்.

இதுவரை நீங்கள் தனியாக இருந்திருப்பீர்கள். உங்களுக்கான சுதந்திரங்கள் என்று சில விஷயங்கள் இருந்திருக்கும். உங்கள் ரசனைகள் என்று சில இருக்கலாம். நீங்கள் லிவ் இன் உறவில் ஈடுபட ஆரம்பித்தால் இவற்றில் எல்லாம் மாற்றங்கள் வரலாம். உங்களுக்கு பிடிக்காத நிறத்தில் உங்களவர் திரைசீலைகளை வாங்கி வரலாம். உங்கள் பாத்ரூமில் அவரது உள்ளாடைகள் கிடக்கலாம். உங்களின் படுக்கை அறையில் ஈர டவலை உங்களவர் காய வைக்கலாம். இது போன்ற சில விஷயங்களால் இதுவரை வாழ்ந்த ஒரு வாழ்வில் இருந்து நீங்கள் உருமாற ஆரம்பிப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுக்கென சில பிரைவசி நேரங்கள் இதற்கு முன் உங்களுக்கு இருந்திருக்கும். மொட்டை மாடி நிலா மழை என உங்கள் தனிமை மிக அழகியலோடு கவிதையாக நகர்ந்திருக்கும். இனிமேல் அப்படி அல்ல. எங்கு சென்றாலும் அவர் இருப்பார். உங்களுக்கான தனிமை என்பது நீங்கள் பாத்ரூமில் இருக்கும் நேரமாக மட்டுமே இருக்கலாம்.

living to gather,life,love,privacy,discussions ,லிவிங் டு கெதர்,வாழ்க்கை,காதல்,பிரைவசி,விவாதங்கள்

இதற்கு முன்பெல்லாம் அவரோடு சில மணி நேரம் மட்டுமே செலவு செய்திருப்பீர்கள். ஆகவே விவாதங்கள் வருகையில் அதனை தவிர்ப்பதில் முக்கியத்துவம் காட்டியிருப்பீர்கள். இனிமேல் இருவரும் ஒரே வீட்டில் வாழ போகிறீர்கள் என்பதால் சண்டை போடுவதை உங்களால் தவிர்க்க முடியாது. பார்மலாக வாழ்வதை விடவும் நார்மலாக வாழ்வது அழகான வாழ்க்கை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

நிறைய பேர் என்ன நினைக்கிறோம் என்றால் ஆண் பெண் பேதம் இன்றி இருவரும் ஒன்றாக வாழும் ஒரு பேச்சிலர் வாழ்க்கைதான் லிவ் இன் என்று. நிச்சயமாக இல்லை. பேச்சிலர் வாழ்க்கையில் எதை பற்றியும் கவலையின்றி ஒரு வார குப்பைகளோடு ஒன்றாக வாழ்ந்திருப்பார்கள் ஆண்கள். அதன்பின் ஒரு நாள் சுத்தம் செய்து மீண்டும் குப்பைகளை தொடர்வார்கள். ஆனால் இப்படியே லிவ் இன் உறவு வாழ்க்கையும் இருக்குமா என்றால் நிச்சயமாக இல்லை. நீங்கள் இதில் படு கவனமாக உங்கள் உடமைகளை நேர்த்தியாக வைப்பது ஒரு நல்ல உறவை மதிப்பதற்கான அடையாளம் ஆகும்.

லிவின் உறவை பற்றி நிறைய பேர் யோசிப்பது திருமணம் செய்து கொண்டால் இவரோடு நம்மால் வாழ முடியுமா இல்லையா என்பதை சோதிப்பதற்காக என்று நினைக்கலாம். ஒருவேளை ஒத்து வரவில்லை என்றால் சட்டத்தின் முடிவிற்காக காத்திருக்காமல் பிரிந்து விடலாம் என்று ஒரு சிலர் நினைக்கலாம். அப்படி அல்ல. உங்களுக்குள் வெறுப்புகள் முளைத்தாலும் இது நீங்கள் இருவரும் திருமணத்திற்கு பின்னர் ஒன்றாக வாழும் ஒரு வாழ்க்கை என்கிற பொறுப்பு உங்களுக்கு அவசியம் வேண்டும். நமது சுயநலத்திற்காக அடுத்தவர் இதயத்தை உடைக்காமல் இருக்க கற்று கொள்ள வேண்டியதும் அவசியம்.

living to gather,life,love,privacy,discussions ,லிவிங் டு கெதர்,வாழ்க்கை,காதல்,பிரைவசி,விவாதங்கள்

நீங்கள் இப்போது இருப்பதில் இருந்து உங்கள் உறவை ஒரு முக்கியமான கட்டத்திற்கு நீங்கள் நகர்த்துகிறீர்கள் என்றால் அதை நீங்கள் அலசி ஆராய்ந்து அதில் பிரச்னைகள் வராமல் இருக்க சில அடிப்படை விதிகளை பின்பற்றுவது அவசியமானது. பொதுவாக இதுவும் திருமணம் போன்ற உறவுதான் என்பதால் பெரும்பான்மை செலவுகளை யாரோ ஒருவரே ஏற்று கொள்ளும் நிலைமை வரலாம். அதனை தவிர்க்க ஆரம்பத்திலேயே அதாவது லிவிங் டு கெதர் ஆகும் முன்பே செலவுகள் பகிர்வதில் உள்ள சதவிகிதங்களை ஒன்றாக பேசி முடிவெடுங்கள். அதன் பின்னர் இந்த உறவுக்குள் நகருங்கள்.

இரண்டு பேருக்கும் தனிப்பட்ட முறையில் பல நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் நீங்கள் ஒன்றாக வாழும் வீட்டிற்கு அடிக்கடி விருந்துக்கு வரலாம். அல்லது சில சமயம் வரலாம். இதனை நீங்கள் மற்றவருக்காக புரிந்து கொண்டு விட்டு கொடுக்க வேண்டும். உங்கள் நேரங்கள் உங்கள் விருந்தினரோடு பகிரப்படலாம். இதனை நீங்கள் வருத்தமோ கோபமோ இல்லாமல் ஏற்க வேண்டும்.

ஒன்றாக வாழ்வது என்று முடிவெடுத்த பின்னர் தனது துணையை உண்மையாகவே நேசிப்பவர்கள் அவர்களது சுமைகளை சந்தோஷமாக பகிர்வார்கள். சமைப்பது ஒருவர் என்றால் சுத்தம் செய்வது இன்னொருவர் துவைப்பது ஒருவர் என்றால் உலர வைப்பது மடித்து வைப்பது இன்னொருவர் என்று எல்லா வேலைகளையும் இருவரும் பகிர்ந்து செய்ய வேண்டும். கண்டிப்பாக இதனை நீங்கள் முன்பே பேச விடுவது பிரச்னைகளை வர விடாமல் தவிர்க்கும்.

living to gather,life,love,privacy,discussions ,லிவிங் டு கெதர்,வாழ்க்கை,காதல்,பிரைவசி,விவாதங்கள்

என்னதான் லிவ்விங் டுகெதர் என்று கூறி கொண்டாலும் இன்னமும் தனி தனியாக மொபைலில் நேரம் செலவிடுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இருவருக்கும் இடையே பேசிக் கொள்ள ஏதும் இல்லாத போதுதான் டிவி பார்க்கும் வழக்கம் முன்பு இருந்தது. இப்போதெல்லாம் ஏதாவது பேச வேண்டும் என்றாலே டிவி போட்டு அதனை இருவரும் ஒன்றாக ரசிப்பதுதான் நேரம் செலவழிப்பது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். கண்டிப்பாக இல்லை. இருவரும் நிறைய பேசுங்கள். ஸ்கீரீனிங் நேரத்தை குறைவாக்குங்கள்.

நீங்கள் இருவரும் எப்போதும் ஒருவர் மீது ஒருவர் இணைந்து கொண்டே இருக்க முடியாது என்னும் யதார்த்தத்தை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளுங்கள். இருவருக்கும் தனிமையான நேரம் என்று ஒன்று தேவை. அப்போதுதான் நினைவில் இனிக்கும் நிஜங்களை பற்றி யோசிக்க முடியும். உங்கள் நண்பர்களோடு நீங்கள் வெளியே செல்தல் அல்லது அவர் நண்பர்களோடு அவர் செல்தல் போன்றவற்றை நிச்சயம் நிறைவேற்றுங்கள். ஒருவர் மீது ஒருவர் காதலும் பிரியமும் மேலும் கூடும்.

Tags :
|
|