Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • எந்தவொரு சூழலிலும் நண்பர்களுடனான தொடர்பை இழக்காதீர்கள்!!

எந்தவொரு சூழலிலும் நண்பர்களுடனான தொடர்பை இழக்காதீர்கள்!!

By: Monisha Sat, 29 Aug 2020 6:04:04 PM

எந்தவொரு சூழலிலும் நண்பர்களுடனான தொடர்பை இழக்காதீர்கள்!!

வருடத்தில் ஒரு முறையாவது நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி பேசுவதற்கு திட்டமிட வேண்டும். அப்போது தங்களுடைய தற்போதைய நிலையை பற்றி அதிகம் பேசுவதை தவிர்த்துவிட வேண்டும். அதுதான் தாழ்வுமனப்பான்மைக்கு வித்திடும். அதே வேளையில் நண்பர்களின் தொழில் ரீதியான வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கலாம்.

பள்ளிப்பருவம் தொடங்கி கல்லூரி காலகட்டம் வரை நட்பை வலுப்படுத்திக்கொள்ளும் நண்பர்கள் வாழ்வின் அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கும்போது பிரிவை எதிர்கொள்கிறார்கள். நெருங்கி பழகிய தோழிகள் திருமணத்திற்கு பிறகு தங்கள் நட்பை தொடர்வது சவாலான விஷயமாகவே இருக்கிறது. 'உண்மையான நண்பர்கள், தோழிகள் ஒருபோதும் பிரிவை சந்திப்பவர்கள் அல்ல. ஒருவேளை தூரத்தில் இருக்கலாம். ஆனால் ஒருபோதும் இதயத்தில் இருந்து விலகி இருப்பதில்லை' என்று சொல்வதுண்டு.

டிஜிட்டல் யுகமும் நட்புக்கு பாலமாக அமைந்திருக்கிறது. நெடுந்தொலைவில் இருந்தாலும் இணையத்தின் தொடர்புடனோ, குறுஞ்செய்திகள் வாயிலாகவோ நட்பை வலுப்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அதனை முறையாக பின்பற்றும் விஷயத்தில்தான் பலவீனம் ஏற்படுகிறது. நீண்ட தூரத்தில் இருக்கும் நீண்ட கால நட்பை தக்கவைத்துகொள்ள செய்வதற்கான விஷயங்கள் இப்போது பார்க்கலாம்.

friends,relationships,gits,inferiority,ego ,நண்பர்கள்,உறவு,தோழிகள்,தாழ்வு மனப்பான்மை,ஈகோ

டிஜிட்டல் யுகத்திலும் நண்பர்களை கண்டுபிடித்து நட்பை பலப்படுத்துவது கடினமானதாகவே இருக்கிறது. சிலர் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க விரும்ப மாட்டார்கள். மற்ற நண்பர்களை விட நாம் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கிறோமோ என்ற தாழ்வு மனப்பான்மை அவர்களுக்குள் இருந்து கொண்டிருக்கும்.

நெருங்கிய நண்பர்களுக்குள் தாழ்வு மனப்பான்மைக்கோ, ஈகோவுக்கோ இடமில்லை. பள்ளி பருவ காலங்களில் நெருங்கி பழகிய நண்பர்கள் குடும்ப சூழலுக்கு மாறிய பிறகு விலகி இருந்தால் அவர்களை நேரில் சந்தித்து பழைய நினைவுகளை மனம்விட்டு பேசலாம். நல்ல நட்புக்கு எந்தவொரு எதிர்பார்ப்புகளும் இருக்காது என்பதை புரிய வைக்கலாம். அடிக்கடி தொடர்பு கொண்டு பேசினாலே நாளடைவில் இருவருக்கும் இடையேயான இடைவெளி குறைந்துபோய்விடும். நல்ல நட்பு மீண்டும் துளிர்விட தொடங்கிவிடும்.

வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக ஊடகங்கள் வழியாக தொடர்பில் இருங்கள். மிகவும் நெருங்கி பழகாத நண்பர்களாக இருந்தால் அவர்களின் பிறந்தநாள், திருமண நாள் போன்றவற்றுக்கு சமூக ஊடகங்கள் வழியாக வாழ்த்து சொல்வதுடன் நிறுத்திவிடாதீர்கள். நேரில் சந்தித்தோ, தொலைபேசியில் தொடர்பு கொண்டோ வாழ்த்துகளை பரிமாறுங்கள். அது நட்பை மேலும் வலுப்படுத்த உதவும்.

friends,relationships,gits,inferiority,ego ,நண்பர்கள்,உறவு,தோழிகள்,தாழ்வு மனப்பான்மை,ஈகோ

பிறந்தநாள், திருமண நாட்களுக்கு பரிசுகளையும் அனுப்பி வைக்கலாம். இருவரும் நெருங்கி பழகிய சமயத்தில் மகிழ்ச்சியாக கழித்த நாட்களை நினைவூட்டும் புகைப்படங்களை அனுப்பி வைக்கலாம். அல்லது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை கடிதங்களாக எழுதி அனுப்பலாம். சந்தோஷ தருணங்களை போல் நண்பர் துயரத்தில் வாடும் சமயத்திலும் அவருக்கு உற்றதுணையாக இருக்க வேண்டும். ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளை பேசி வருத்தத்தை போக்க முன்வர வேண்டும். அவைதான் உண்மையான நண்பர்களை அடையாளம் காட்டும்.

நீண்டகாலமாக நேரில் சந்திக்காத நண்பர்களை திடீரென்று சந்தித்து பேசலாம். எதிர்பாராத சந்திப்பு நட்பை மேலும் வலுவாக்கும். எந்தவொரு சூழலிலும் நீண்ட கால நண்பர்களுடனான தொடர்பை இழக்காதீர்கள்.

Tags :
|