Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • உங்கள் உறவுச்சிக்கலை உங்களால் மட்டுமே சரிசெய்ய முடியும்

உங்கள் உறவுச்சிக்கலை உங்களால் மட்டுமே சரிசெய்ய முடியும்

By: Karunakaran Tue, 06 Oct 2020 3:33:19 PM

உங்கள் உறவுச்சிக்கலை உங்களால் மட்டுமே சரிசெய்ய முடியும்

வீடு முதல் வீதி வரை உறவுகளை சீர்படுத்துவதில் சிக்கல்கள் எழுகிறது. பிரச்சினைகளை ஒருபோதும் மனந்திறந்து பேசமாட்டார்கள். வேலை செய்யும் அலுவலகத்திலும் ‘ஈகோ’ வால் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருப்பார்கள். நெருக்கமான நண்பர்கள் போனில் அழைத்தாலும், பேசாமல் அலட்சியப்படுத்தி விடுவார்கள். நண்பர்களை நேரில் சந்திப்பதையும் தவிர்ப்பார்கள். இப்படிப்பட்ட உறவுச்சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பவர்கள், தங்கள் உறவுகளையும், நட்புகளையும் மேம்படுத்திக்கொள்ள அவர்களால் மட்டுமே முடியும்.

அடிக்கடி ‘நான் ரொம்ப ‘பிஸி’ யாக இருக்கிறேன்’ என்ற வார்த்தையை நெருக்கமானவர்களிடம்கூட பயன்படுத்துகிறவராக இருப்பீர்கள். ‘மீண்டும் உன்னை அழைக்கிறேன்’, ‘உங்களுக்கு ‘மெசேஜ்’ அனுப்புகிறேன்’ என்று கூறினாலும் அதை செய்யமாட்டீர்கள். நீங்கள் செய்யும் முதல் தவறு இங்கிருந்துதான் தொடங்குகிறது. நீங்கள் எவ்வளவு முக்கியமான வேலையில் இருந்தாலும், உங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக நீங்கள் இரண்டு நிமிடத்தை செலவழித்துதான் ஆகவேண்டும். அப்படி இருந்தால்தான் உங்களால் உறவுகளை சீர்படுத்த முடியும்.

relationship,problem,couples,family ,உறவு, பிரச்சினை, தம்பதிகள், குடும்பம்

உங்கள் பெற்றோரிடம் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை பார்த்தபடியே உங்கள் குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும். நீங்கள் உங்கள் பெற்றோருக்கு கொடுக்கும் மதிப்பும், மரியாதையும்தான் உங்களுக்கு உங்கள் குழந்தைகளிடமிருந்தும் கிடைக்கும். உங்கள் மனைவியை அலட்சியப்படுத்துவது, தரக்குறைவாக விமர்சிப்பது போன்றவைகளை செய்துகொண்டே, உங்கள் மகனிடம் ‘பெண்களுக்கு சம உரிமை கொடுக்கவேண்டும். பெண்களை மதிக்கவேண்டும்’ என்று நீங்கள் உபதேசம் செய்து கொண்டிருந்தால் அது உங்களை முரண்பாடான மனிதராக வெளிக்காட்டிவிடும்.

உறவுகளை சீர்படுத்தவேண்டுமானால் அதை வீட்டில் இருந்து தொடங்கவேண்டும். கணவர், மனைவிக்கும்-மனைவி, கணவருக்கும் சம உரிமை தரவேண்டும். குடும்பத்தினரோடு வெளி இடங்களுக்கு செல்லும்போது, உற்சாகமான நேரங்களில் குழந்தைகள் மனம்விட்டு பேசும். அதன் மூலம் அவர்களுடனான உறவில் இடைவெளி ஏற்பட்டிருந்தாலும் அதை சரிசெய்துவிடலாம். அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்களை பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாததை அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு தெரியாததை நீங்கள் கற்றுக்கொடுங்கள்.

Tags :