Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • குழந்தைகளின் பழக்கவழக்கங்கள் அனைத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்

குழந்தைகளின் பழக்கவழக்கங்கள் அனைத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்

By: Karunakaran Sat, 26 Dec 2020 1:33:02 PM

குழந்தைகளின் பழக்கவழக்கங்கள் அனைத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்

அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் விழித்தாகவேண்டும் என்பது- டி.வி. நிகழ்ச்சிகள் பார்க்க நேரம் ஒதுக்குவது- குறிப்பிட்ட நேரத்தில் படித்துதான் ஆகவேண்டும் என்பது, போன்று குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்கள் அனைத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை பெற்றோர் விதிக்கக்கூடாது. அதை குழந்தைகள் மீறும்போது தண்டனை வழங்கும் வழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. இப்படிப்பட்ட நிபந்தனைகளோடு குழந்தைகளை வளர்ப்பவர்கள் அடக்குமுறை எண்ணம் கொண்ட பெற்றோராவர்.

இத்தகைய பெற்றோரிடம் அடக்குமுறை உணர்வுதான் மேலோங்கியிருக்கும். அன்பு இருக்காது. இப்படி அடக்குமுறைக்கு உள்ளாகி வளரும் குழந்தைகள் டீன்ஏஜ் பருவத்தில் பெற்றோரின் அடக்குமுறை சுபாவத்திற்கு பதிலடி கொடுக்கத்தொடங்கும். இது குடும்பத்திற்குள் கடுமையான பிரச்சினைகளை உருவாக்கும். அவர்களில் சிலர் மோசமான நண்பர்களால் ஈர்க்கப்பட்டு போதைப் பொருள் பழக்கத்திற்கும் உள்ளாகிவிடக்கூடும். அதுவரை கடுமையான கட்டுப்பாடுகளோடு வளர்ந்து வருகிறவர்களுக்கு டீன்ஏஜில் சுதந்திரம் கொடுக்கும்போது, அவர்கள் அளவற்ற சுதந்திரத்தை அனுபவிக்க முயற்சிப்பார்கள்.

parents mstrict restrictionsmchildren,habits ,பெற்றோர், கடுமையான கட்டுப்பாடுகள், குழந்தைகள், பழக்கம்

எல்லையற்ற சுதந்திரத்தை திடீரென்று அனுபவிக்கும் இவர்களிடம் நள்ளிரவில் ஊர் சுற்றுதல், வன்முறை செயல்பாடுகளில் ஈடுபடுதல், அதிக வேகத்தில் கார் ஓட்டுதல் போன்ற முரண்பாடான பழக்கவழக்கங்கள் தோன்றக்கூடும். இது அவர்களது எதிர்காலத்தை பாதிக்கும் நிலை ஏற்படலாம். பெற்றோர் இருவரும் வேலைபார்ப்பவர்களாக இருக்கும்போது, அவர்கள் கவனம் பெரும்பாலும் வேலையை சுற்றியே இருக்கும். அதனால் குழந்தைகளை அடுத்தவர்கள் பொறுப்பில்விட்டுவிடுவார்கள். தாத்தா-பாட்டி, உறவினர் அல்லது வேலைக்காரர் பொறுப்பில் அந்த குழந்தைகள் வளர்வார்கள். இப்படிப்பட்ட சூழலில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர் தங்களை கவனிக்கவில்லை என்ற மனக்குறை இருந்துகொண்டிருக்கும். பெற்றோர் புறக்கணிப்பதாக கருதிவிடுவார்கள்.

பெற்றோரின் அன்பு கிடைக்காத இந்த குழந்தைகளிடம் கட்டுப்பாடான வாழ்க்கைமுறை இருக்காது. தாத்தா-பாட்டிகள், அவர்களால் வளர்க்கப்படும் குழந்தைகளின் விருப்பத்திற்கெல்லாம் வளைந்துகொடுப்பார்கள். அதனால் இத்தகைய குழந்தைகளிடம் அடம்பிடிக்கும் தன்மை அதிகமாக இருந்துகொண்டிருக்கும். குழந்தைகள் பெற்றோரால் வளர்க்கப்படும்போது அவர்களிடமிருந்து பெரும்பாலான வாழ்க்கைப்பாடங்களை பார்த்து, தெரிந்து கற்றுக்கொள்வார்கள். அந்த வாழ்வியல் அறிவு குழந்தைகளுக்கு மிக அவசியம். பெற்றோரின் முழு கவனிப்பு கிடைக்காத குழந்தைகள், நண்பர்களால் அதிகம் ஈர்க்கப்படுவார்கள்.

Tags :