Advertisement

உங்கள் காதல் மொழி என்னவென்று பாருங்கள்!

By: Monisha Tue, 15 Dec 2020 5:31:36 PM

உங்கள் காதல் மொழி என்னவென்று பாருங்கள்!

உலகில் வாழும் ஒவ்வொரு உயிரும் காதலை பல விதங்களில் வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் மனிதர்கள் 5 வகையான மொழிகளில் காதலை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் தன் காதலை வெளிப்படுத்த இவற்றில் ஏதோ ஒன்றை கடைபிடிக்கின்றன. இதில் உங்கள் மொழி என்ன உங்கள் காதலர் மொழி என்ன என்பதை நீதெரிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.

உறுதிமொழி காதலர்
தங்கள் துணை எவ்வளவு அழகாக இருக்கிறார் என்பதைக் கூறுவதன் மூலம் ஒருவர் தன் காதலை நம்பிக்கையுடன் நகர்த்துகிறார். அவர்கள் தங்கள் வாழ்வில் வந்ததற்கான நன்றியை அவர்கள் எப்போதும் கூறிக் கொண்டே இருப்பார்கள். தன்னை நேசிக்க தகுதியுடையவர்தான் என்பதை உங்களுக்குத் புரிய வைப்பார்கள். இந்த உறவு எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்திருப்பார்கள். உங்களுக்காக எப்போதும் காத்திருப்பார்கள்.

love language,love,relationship,caring,service ,காதல் மொழி,அன்பு,உறவு,அக்கறை,சேவை

தரமான நேரம் செலவிடுதல்
இந்தக் காதல் மொழியைக் கொண்டிருக்கும் துணை தங்கள் துணையோடு அதிக நேரம் செலவிடுவதில் சந்தோஷம் கொள்வார்கள். மற்ற எல்லாரையும் விட நீங்கள் முக்கியமானவர் என்பதை அவர்கள் உணர்த்துவார்கள். விடுமுறைகளை ஒன்றாக கழிப்பது, அல்லது ஒரு குழுவோடு இணைவது அவர்களோடு பல விளையாட்டுகளில் உங்களைக் கலந்து கொள்ள வைப்பது என இதன் தன்மை மாறுபடலாம்.

சேவை மனப்பான்மை

உங்கள் துணையின் தேவை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தருபவரா நீங்கள் அப்போது நீங்கள்தான் இந்த சேவகி காதல் மொழி கொண்டவர். சமைத்து பரிமாறலாம் , காய்கறிகள் வாங்கி வரலாம், அவர்கள் பொருட்களை அடுக்க உதவலாம், உங்கள் திறமைகளை உபயோகித்து அவர்களுக்கு எல்லா வழியிலும் உறுதுணையா நிற்கலாம் இதெல்லாம் இவர்களின் குணங்கள்.

love language,love,relationship,caring,service ,காதல் மொழி,அன்பு,உறவு,அக்கறை,சேவை

உடல் ஸ்பரிசம்
காதலை நாடும் அனைவருமே காமத்தை தேடுபவர்கள்தான் என்றொரு நம்பிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. ஆனால் அப்படி செய்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இந்த மொழி உடையவர்கள் ஒரு வெதுவெதுப்பான அணைப்பு, கதகதப்பான சாய்தல், அல்லது அதையும் விட கொஞ்சம் அதீதமான ஸ்பரிசங்கள் இதனை நிரூபிக்கலாம். அல்லது வெறுமனே அருகருகே அமர்ந்தும் இருக்கலாம். இது ஒரு அன்யோன்யத்தையும் சார்புத்தன்மையயும் பிரதிபலிப்பவர் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்கிறது.

பரிசு பெறுதல்
உங்களை போன்ற ஒரு துணையிடம் இருந்து அதிக பரிசு பொருட்கள் பெறுவதை நீங்கள் விரும்புகிறீர்களா? இது போன்ற மொழி கொண்டவர்கள் தங்கள் செயல்களை அங்கீகரிக்க விரும்புவராக இருப்பார்கள். இப்படி பரிசுகளை வாங்கினால் மட்டுமே தன் மேல் தன் துணை அக்கறையோடு இருப்பதாக நம்புவார்கள் இந்த காதல் மொழிக்காரர்கள்.

Tags :
|
|