Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • துணையுடன் பேச்சு குறையாமல் இருக்க சில குறிப்புகள்!

துணையுடன் பேச்சு குறையாமல் இருக்க சில குறிப்புகள்!

By: Monisha Tue, 11 Aug 2020 4:31:18 PM

துணையுடன் பேச்சு குறையாமல் இருக்க சில குறிப்புகள்!

அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவோ... உலகில் எந்த மூலையில் இருப்பவருடனும் அரை நிமிடத்தில் பேசிவிடலாம் என்று சொல்கிற தகவல் தொழில்நுட்ப புரட்சிக்காலத்தில் நாம் வாழ்கிறோம். ஆனால், நமக்கு மிக முக்கியமான ஒருவர் நம் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுகொண்டிருக்கிறார். அவர்தான் நமது வாழ்க்கைத்துணை. கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை, இருவரின் வேலை நேரம் முன் பின் அமைந்துவிடுவது, சோஷியல் மீடியாவில் நேரம் விரயம் செய்வது எனப் பல காரணங்களால் கணவன் மனைவி இருவரும் பேசிக்கொள்ளும் நேரம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.

காதல் திருமணமோ, பெற்றோர் செய்துவைத்த திருமணமோ, திருமணமான புதிதோ... நாற்பது, அறுபது வயதுகளில் இருப்பவர்களோ... எந்தச் சூழலிலும் கணவன் மனைவிக்கு இடையே உரையாடுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். அன்றைய தினத்தை எப்படித் திட்டமிடப்போகிறோம் என்பது தொடங்கி... குழந்தை வளர்ப்பு, அவர்களின் எதிர்காலம், சேமிப்பு, ஓய்வு காலம் என முடிவில்லா வார்த்தைகளிலான உறவு அது. சரி துணையுடன் பேச்சு குறையாமல் இருக்க சில குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.

husband,wife,conversation,relationship,love ,கணவன்,மனைவி,உரையாடல்,உறவு,அன்பு

* பேசும் தொனி மிகவும் முக்கியம். வேலைச்சுமையால் தாமதமாக அலுவலகத்தில் இருந்து கிளம்பி, களைப்புடன் வீடுவந்தடையும் நொடியில், 'எங்க போயிட்டு வர்றீங்க/வர்ற?' என்ற கேள்வி, இணையை இன்னும் நொந்துபோகவோ, கோபத்தில் வெடிக்கவைக்கவோதான் செய்யும். 'வேலை நிறையவா இன்னிக்கு' என்பதாக, இணையின் சூழல் உணர்ந்து இனிமையாக பேச வேண்டும்.

* அதையும் மீறிச் சிறு சண்டை வந்துவிட்டாலும் 'ஸாரி' சொல்வதற்கு ஈகோ பார்க்கக் கூடாது. அதுவே தீர்வுக்கான முதல் மருந்து. பொய் சொல்வதைத் தவிர்க்க வேண்டும். ஒரு பொய்யை நீண்ட காலம் காப்பாற்ற முடியாது. அந்த விஷயம் பொய் எனத் தெரிந்ததும் அடுத்து சொல்லும் உண்மைகளெல்லாம்கூட பொய்களாகவே பார்க்கப்படும். அது இருவருக்குமான உரையாடலைத் தடுப்பதில் பிரதான இடம் வகிக்கும்.

* கணவன் மனைவி இருவரும் தங்களுக்கான தனிமைப் பொழுதுகளை உருவாக்கிக்கொள்ள முனைய வேண்டும். இணை ஏதோ ஒரு விஷயம் பேசவரும்போது 'குழந்தைகளைப் பார்த்துக்கணும்', 'நான் டெட்லைன் டென்ஷன்ல இருக்கேன்' என, அதைத் தவிர்க்கும்படியான காரணங்களைச் சொல்லக் கூடாது. குறிப்பாக, தனிமையில் கணவருடன் பேசுவதற்கான விஷயங்களை எப்போதும் வைத்திருப்பார் மனைவி. அதைக் கணவர் புரிந்துகொள்ள வேண்டும்.

husband,wife,conversation,relationship,love ,கணவன்,மனைவி,உரையாடல்,உறவு,அன்பு

* இதேபோலத்தான் கணவரும். தன்னுடன் பேசி, சிரித்து, ஆலோசிக்கும் பொழுதுகளில் மனைவி தொடர்ந்து ஆர்வமின்றி இருந்துவந்தால், அவருக்கும் அது பழகிவிடும். கணவன் மனைவிக்கு இடையே வார்த்தைகள் குறைவதால் உருவாகும் இடைவெளி, சில நேரங்களில் அவர்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கலாம். இது விவாகரத்து வரைகூட செல்லக்கூடும்.

* இடைவெளியைக் குறைக்கும் முதல் முயற்சியாக, கணவன் மனைவி இருவரும் ஒரே இடத்தில் சேர்ந்திருக்கும்படியாக வேலைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். இருவரும் ஆளுக்கொரு அறையில் பிரிந்துகிடக்காமல், ஒரே அறையில் இருந்தபடி, ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே அவரவர் வேலைகளைச் செய்யலாம்.

Tags :
|