Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • அடுத்த குழந்தையை வயிற்றில் சுமக்கும் போதிருந்தே முதல் குழந்தையை தயார்படுத்த வேண்டும்

அடுத்த குழந்தையை வயிற்றில் சுமக்கும் போதிருந்தே முதல் குழந்தையை தயார்படுத்த வேண்டும்

By: Karunakaran Fri, 13 Nov 2020 1:54:40 PM

அடுத்த குழந்தையை வயிற்றில் சுமக்கும் போதிருந்தே முதல் குழந்தையை தயார்படுத்த வேண்டும்

இரண்டாவது முறையாக தாய்மையடையும்போது, எல்லா குடும்பங்களிலும் மகிழ்ச்சி இரட்டிப்பாகி விடுகிறது. ஆனால் இரண்டாவது குழந்தையின் வரவு, முதல் குழந்தையின் மகிழ்ச்சியான உலகத்தில் மாற்றங்களை ஏற்படுத்திவிடக்கூடாது. இரண்டாவது குழந்தையின் வரவால், புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தால் அவர்கள் நிச்சயம் ஏங்கிப்போவார்கள். இரண்டாவது குழந்தைக்கு முன்னுரிமை கிடைப்பதை கவனிக்கும் மூத்த குழந்தை, மனதளவில் மிகவும் பாதிக்கப்படும். சில குழந்தைகள் சோர்வாகவும், இன்னும் சிலர் கோபமாகவும் மாறிப்போக வாய்ப்புள்ளது.

இரண்டாவது குழந்தை பிறந்துவிட்டாலும், முதலில் பிறந்ததும் அதுபோன்றதொரு குழந்தைதான் என்பதை பெற்றோர் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். ‘உன் மீதும் முன்புபோல் அன்பு வைத்திருக்கிறோம்’ என்பதை இந்த தருணத்தில் முதல் குழந்தைக்கு புரிய வைக்கும் விதமாக பெற்றோர் செயல்பட வேண்டும். அடுத்த குழந்தையை வயிற்றில் சுமக்கும் போதிருந்தே, அதற்கு முதல் குழந்தையை தயார்படுத்த வேண்டும். பிறக்கப்போகும் இரண்டாவது குழந்தை பற்றிய அடிப்படை விஷயங்களை தெளிவுபடுத்தி, தன் சகோதரனை (அல்லது சகோதரியை) வரவேற்க முதல் குழந்தையை தயார் செய்ய வேண்டும். இதனால் அவர்கள் தன் உடன்பிறப்பை மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்.

first baby,next baby,womb,parents ,முதல் குழந்தை, அடுத்த குழந்தை, கரு, பெற்றோர்

இப்படி கர்ப்பத்திலிருந்தே மூத்த குழந்தையை சகோதர பாசத்திற்குப் பழக்கினால், அது இயல்பாகிவிடும். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு நிஜமாகவே முதல் குழந்தையிடம் முன்பு போல் அக்கறை காட்ட முடியாமல் போக வாய்ப்புகள் அதிகம் என்பதால், கர்ப்பகாலத்திலே முதல் குழந்தைக்கு ஏக்கம் ஏற்படாத அளவுக்கு பாசத்தை புரியவைக்கவேண்டும். இரண்டாவது குழந்தைக்கு பொருட்கள் ஏதாவது வாங்கச்சென்றால், மூத்த குழந்தையையும் அழைத்துச் செல்லுங்கள். பாப்பாவுக்கு எந்த உடையை தேர்வு செய்யலாம், எந்த பொம்மையை வாங்கலாம் என்று ஆலோசனை கேளுங்கள்.

பாப்பாவுக்கு இது நன்றாக இருக்கும் என்று அவர்கள் கூறும் கருத்து களுக்கு முன்னுரிமை தாருங்கள். அதையே தேர்வு செய்து இரண்டாவது குழந்தைக்கு கொடுங்கள். அது இரு குழந்தைகளையுமே மகிழ்ச்சிப்படுத்தும். பாப்பாவை நானும் தூக்கிவைத்துக்கொள்கிறேன் என்று மூத்த குழந்தை கேட்டால், அவர்களின் மடியில் பாதுகாப்பாக உட்காரவைக்க அனுமதியுங்கள். உன்னால் வைத்துக்கொள்ள முடியாது என்று கூறி, புறக்கணிக்காதீர்கள். அந்தக் குழந்தையை கவனிக்க முதல் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள்.

Tags :
|