Advertisement

காதலனுடன் சொல்ல கூடாத விஷயங்கள்

By: Karunakaran Thu, 10 Sept 2020 6:29:39 PM

காதலனுடன் சொல்ல கூடாத விஷயங்கள்

ஓர் நல்ல கலந்துரையாடல் தான் இருவர் நெருக்கமாவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. ஆனால் சில நேரங்களில், உங்கள் உறவை முறித்துக் கொள்ளும் அல்லது இருவருக்கும் இடையில் கசப்பை ஏற்படுத்தும் சில விஷயங்களை பற்றி உங்கள் காதலனுடன் பேசாமல் இருப்பது நல்லது. எல்லாவற்றையும் தனது காதலனுடன் பகிர்ந்து கொள்ளும் நேர்மையான காதலியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தவறில்லை. இருப்பினும், மிகவும் நேர்மையாக இருப்பது, சில நேரங்களில் இருவரும் பகிர்ந்து கொள்ளக்கூடிய உணர்ச்சிகரமான உறவுகளை சேதப்படுத்தும்.

நம் பெற்றோர் என்று வரும்போது, நாம் அனைவரும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவது என்பது பொதுவான ஒன்று தான். அவரது பெற்றோருடன் ஆரோக்கியமான பேச்சில் ஈடுபடுங்கள். சில நேரங்களில் அவரது தாயின் கருத்துக்களால் உங்கள் மனம் புண்படலாம்; இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அதை காரணம் காட்டி கோவப்பட்டு சண்டைபோடுவதற்கு பதிலாக, இருவரும் பொறுமையாகப் பேசித் தீர்த்து கொள்வது தான் நல்லது.

boyfriend,love,friends,family ,காதலன், காதல், நண்பர்கள், குடும்பம்

உங்களின் நெருங்கிய நண்பர் தனது ஆழ்ந்த ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதை பற்றி நீங்கள் உங்கள் காதலனுடன் கிசுகிசுக்க முடிவு செய்வது நல்ல விஷயம் அல்ல. அவ்வாறு செய்வது உங்கள் நண்பரின் நம்பிக்கையை மீறுவதாகும். உங்கள் காதலனை நீங்கள் நம்புவது சரி தான். ஆனால், அதற்காக உங்கள் நண்பரின் நம்பிக்கையை நீங்கள் உடைக்க நினைப்பது தவறு. உங்கள் காதலனின் செலவுகள் பற்றி பேசுவதை தவிருங்கள், பணம் வரவு செலவு பற்றியெல்லாம் பேசாதீர்கள். அது எப்போதிருந்தாலும் சிக்கல் தான். ஒரு சரியான உறவு என்பது, இருவரும் ஒரே பாதையில் நடப்பது தான்;

உங்கள் காதலனின் முன்னாள் காதலி பற்றி பேசுவதை தவிருங்கள். ஒரு நல்ல காரணத்திற்காக, பழைய விஷயங்களை பற்றி பேசாமல் இருப்பதே நல்லது. அவரது முன்னாள் காதலி, உங்களின் மோசமான கவலையாக இருக்கலாம். ஆனால், அவரது பேஷன் சென்ஸ் அல்லது அவரது தோற்றங்களைப் பற்றி விவாதிப்பது, உங்களை உங்கள் காதலனின் பார்வையில் கொஞ்சம் குறைத்து எடை போடா வழிவகுக்கும். மேலும், உங்களை பற்றிய நல்ல அபிப்ராயத்தை மாற்றிவிடும்.

Tags :
|